ரஷ்யாவிற்கு புதிதாக நான்கு பகுதிகள்: கிரெம்ளின் இணைப்பு விழாவில் ஜனாதிபதி புடின் அறிவிப்பு


உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கும் அறிவிப்பினை வெளியிட்டார் ஜனாதிபதி புடின்.


ரஷ்யாவிற்கு புதிய நான்கு பகுதிகள் உருவாகி இருப்பதாக பேச்சு.

ரஷ்யாவிற்கு புதிதாக நான்கு பகுதிகள் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பினை தொடர்ந்து, சுதந்திர பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்த கெர்சன், லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் மற்றும் Zaporizhzhia ஆகிய நான்கு பகுதிகளும் ரஷ்யாவுடன் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவிற்கு புதிதாக நான்கு பகுதிகள்: கிரெம்ளின் இணைப்பு விழாவில் ஜனாதிபதி புடின் அறிவிப்பு | Putin Says 4 New Regions As Russia Annexes Ukraine

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், மக்கள் விருப்பம் தெரிவித்துள்ள நான்கு நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்கும் கிரெம்ளின் இணைப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்வார் என அறிவித்தார்.

இதனடிப்படையில் வெள்ளிக்கிழமையான இன்று கிரெம்ளின் நடைபெற்ற இணைப்பு விழாவில் கலந்து கொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைனிடம் இருந்து கைப்பற்ற  கெர்சன், லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் மற்றும் Zaporizhzhia ஆகிய நான்கு பகுதிகளையும் ரஷ்யாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைவதாக அறிவித்தார்.

ரஷ்யாவிற்கு புதிதாக நான்கு பகுதிகள்: கிரெம்ளின் இணைப்பு விழாவில் ஜனாதிபதி புடின் அறிவிப்பு | Putin Says 4 New Regions As Russia Annexes Ukraine


கூடுதல் செய்திகளுக்கு: ஜேர்மனியின் வேலையின்மை விகிதம்: வெளியாகியுள்ள சமீபத்திய அறிக்கை

மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை கிரெம்ளின் விழாவில் ஆற்றிய உரையில் ரஷ்யாவிற்கு நான்கு புதிய பகுதிகள் இருப்பதாக அறிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.