ராஜபக்சே சகோதரர்களுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு| Dinamalar

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமான சுப்ரமணியசாமி இலங்கை சென்றுள்ளார்.

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி விழா பூஜையில் கலந்து கொண்ட சுப்ரமணியசாமி, மறுநாள் முன்னாள் அதிபர் கோத்தபயாவையும் சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்து பேசிய, பாதுகாப்பு துறை தொடர்பான பல்கலையிலும் உரையாற்றினார். ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களையும் சுப்ரமணியசாமி சந்தித்து பேசி உள்ளார். ராஜபக்சேக்களின் குடும்ப நண்பரான சுப்ரமணிய சாமி, இதற்கு முன்னரும் அவர்களை அடிக்கடி சந்தித்து பேசியுள்ளார்.

ராஜபக்சேவை சந்தித்த பிறகு, அவர்களை புகழ்ந்து சுப்ரமணியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுதலை புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை ஒழித்தனர் எனக்கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.