சென்னை: சென்னையில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி பணத்தை பள்ளிகொண்டாவில் போலீஸார் பறிமுதல் செய்தனர். வேலூர் அருகே சுங்கச்சாவடி ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றில் லாரியில் இருந்து காருக்கு பெட்டி பெட்டியாக பணத்தை மாற்றிய கும்பலை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் அடுத்த பள்ளிகொண்டா சுங்கன்சாவடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது நின்று கொண்டிருந்த லாரியிலிருந்து காருக்கு அட்டைப் பெட்டிகளில் மாற்றிய பொழுது, சந்தேகமடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த அட்டைப் பெட்டியில் இருப்பது பணம் என்பது தெரியவந்தது. அதற்கான ஆவணம் இல்லாத நிலையில், அந்த பணம் கைப்பற்றப்பட்டது. இதில் மொத்தம் ரூபாய் 10 கோடி இருந்த நிலையில், அதை எடுத்து வந்த நான்கு பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆந்திர மாநில எல்லையில் உள்ள 7 சோதனை சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலூர் அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடியிலும் 24 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு பள்ளிகொண்டா போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பள்ளி கொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு 4 பேர் கும்பல் பொருட்களை ஏற்றி கொண்டிருந்தனர். இதனைக் கண்ட போலீசார் அங்கிருந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் பிளாஸ்டிக் கவரில் செய்யப்பட்ட பண்டல்களை காரில் இருந்து லாரிக்கு மாற்றியது தெரிய வந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது.
இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினர். இதனைத் தொடர்ந்து பணம் மற்றும் கார், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 4 பேரையும் பள்ளிகொண்டா போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.