புதுடெல்லி: வாட்ஸ்அப் நிறுவனத்தின் கொள்கைகள், தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக பயனாளிகள் தங்களது அழைப்புகள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வீடியோ உள்ளிட்ட தகவல்களை அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தி வருகிறது. இது தனிமனித சுதந்திரம், பேச்சுரிமைக்கு எதிரானது,’ என்று எதிர்ப்பு தெரிவித்து 2 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு கேஎம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு தொடர்பான வாதங்களை வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் முடித்து கொள்ள வேண்டும்,’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2023ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.