விசில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஜேடி – ஜெர்ரி
தமிழில் 1997இல் அஜித் – விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் என்ற படத்தை இயக்கியவர்கள் ஜேடி ஜெர்ரி. அதன் பிறகு இவர்கள் இருவரும் 2003ல் விசில் என்ற படத்தை இயக்கினார்கள். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் என்ற படத்தை இயக்கினார்கள். இந்த படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் 2003ம் ஆண்டு தாங்கள் இயக்கிய விசில் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கும் பணிகளில் ஜேடி ஜெர்ரி இறங்கி உள்ளார்கள். இந்த படத்திலும் விசில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த ஷெரின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.