மும்பை, :சர்வ் வங்கி, அதன் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, நேற்று 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து அறிவித்துள்ளது. இதையடுத்து, தற்போதைய வட்டி விகிதம் 5.90 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மே மாதத்தில் துவங்கி, ரிசர்வ் வங்கி நான்காவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, இது வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையிலான பணக் கொள்கை குழுவின் ஆறு உறுப்பினர்களில் ஐந்து உறுப்பினர்கள், வட்டியை உயர்த்த ஆதரவளித்து உள்ளனர். இதனால், தற்போதைய வட்டி விகிதம் 5.90 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இதையடுத்து, வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டியும் அதிகரிக்கும்.
மற்ற முக்கிய அம்சங்கள்
கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை, 190 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச வட்டி இதுவாகும். நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என முன்பு அறிவித்துஇருந்த நிலையில், தற்போது 7 சதவீதமாக இருக்கும் என குறைத்து கணிக்கப்பட்டு உள்ளது செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி 6.3 சதவீதமாகவும், டிசம்பர் மற்றும் மார்ச் காலாண்டுகளில் தலா 4.6 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது சில்லரை விலை பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் டிசம்பர் மாதம் வரை சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய அதிகபட்ச இலக்கான 6 சதவீதத்துக்கும் கூடுதலாகவே இருக்கும்
இந்தியாவுக்கான சராசரி கச்சா எண்ணெய் விலை, 1 பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருக்கும்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சீராக உள்ளது. நடப்பு ஆண்டு செப்டம்பர் 28 வரை, 7.4 சதவீதம்மட்டுமே குறைந்துள்ளது
ரிசர்வ் வங்கி, டாலருக்கு நிகரான நிலையான ரூபாய் மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதில்லை. அதிகப்படியான ஏற்ற இறக்கம் ஏற்படும் போது, அதைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே சந்தையில் தலையிடுகிறது
செப்டம்பர் 23ம் தேதி நிலவரப்படி, அன்னிய செலாவணி கையிருப்பு 67 சதவீதம் குறைந்து, 537.50 பில்லியன் டாலராக உள்ளது உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சமீபத்திய சரிவு நீடித்தால், பணவீக்கத்திலிருந்து விடுபடலாம் வங்கிக் கடன் 16.2 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது
நடப்பு கணக்கு பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அடுத்த பணக் கொள்கை குழு கூட்டம், டிசம்பர் 5 – 7ல் நடைபெறும்.மூன்றாவது அதிர்ச்சி!
கடந்த இரண்டரை ஆண்டுகளில், உலகம், கொரோனா தொற்று நோய் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என இரண்டு அதிர்ச்சி சம்பவங்களை பார்த்து உள்ளது. இந்த அதிர்ச்சி, உலகப் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, முன்னேறிய நாடுகளின் ‘வட்டி விகித உயர்வு’ எனும் புயலால், உலகம் மூன்றாவது பெரிய அதிர்ச்சியில் உள்ளது.சக்திகாந்த தாஸ், கவர்னர், ரிசர்வ் வங்கி
சமந்தக் தாஸ், தலைமை பொருளாதார நிபுணர், ஜே.எல்.எல்., இந்தியாஅனுஜ் பூரி, தலைவர், அனராக்
வீடுகள் விற்பனை பாதிக்கும்!
ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்ததை அடுத்து, வீடுகள் விற்பனை பாதிக்கப்படும் என அத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதன் பாதிப்பு குறுகிய கால அளவிலேயே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். வீட்டுக் கடன் வட்டி விகிதம் 9 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உள்ளதால், நடுத்தர காலத்தில் வீட்டு விற்பனை வளர்ச்சி குறையும் என்று கருதுகிறோம். இது, பண்டிகை காலத்திற்குப் பின் குறையும் என கருதுகிறோம். ரெப்போ வட்டி விகித உயர்வால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விரைவில் உயரும். இது, வரவிருக்கும் பண்டிகை காலாண்டில், குறிப்பாக மலிவுமற்றும் இடைப்பட்ட வீட்டுப் பிரிவுகளில் விற்பனையை ஓரளவுக்கு பாதிக்கலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்