வெளிநாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரித்தானியர்: நண்பர்களிடம் கடைசியாக கூறிய அந்த உண்மை


கட்டாரில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக்கிண்ணம் தொடர்பில் கட்டாரை விளம்பரப்படுத்தும் பணி

அவரது மனைவி தெரிவிக்கையில், பதில் கிடைக்காத பல கேள்விகள் இன்னமும் எஞ்சியுள்ளது

கட்டார் நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரித்தானியர் ஒருவர், கடைசியாக தமது நண்பர்களிடம் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தில் பிரித்தானிய உள்விவகாரத்துறை உரிய நடவடிக்கை முன்னெடுக்கும் எனவும், அந்த நபரின் குடும்பத்தாருக்கு உதவும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கட்டார் விமான சேவை நிறுவனத்தின் கீழ் செயற்படும் Discover Qatar என்ற அமைப்பில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் 52 வயதான மார்க் பென்னட்.
கட்டாரில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக்கிண்ணம் தொடர்பில் கட்டாரை விளம்பரப்படுத்தும் பணியை மார்க் பென்னட் முன்னெடுத்து வந்தார்,

வெளிநாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரித்தானியர்: நண்பர்களிடம் கடைசியாக கூறிய அந்த உண்மை | Brit Dies Tortured By Qatar Secret Police

@getty

ஆனால் பின்னர் அவர் ராஜிநாமா செய்துள்ளார்.
தொடர்ந்து சவுதி அரேபிய நிறுவனம் ஒன்றில் பணியாற்ற முடிவு செய்து, அங்கே செல்லவிருந்த நிலையிலேயே மார்க் பென்னட் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்போது மார்க் பென்னட் தொடர்பில் அவரது மனைவி தெரிவிக்கையில், பதில் கிடைக்காத பல கேள்விகள் இன்னமும் எஞ்சியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கட்டார் ஏர்வேஸ் அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட பத்து வாரங்களுக்குப் பிறகு, 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தோஹா ஹொட்டல் ஒன்றில் மார்க் பென்னட் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அவர் கண்களை மூடப்பட்ட நிலையில், கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், கட்டாரின் சிறப்பு பொலிசாரே கைது நடவடிக்கை முன்னெடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரித்தானியர்: நண்பர்களிடம் கடைசியாக கூறிய அந்த உண்மை | Brit Dies Tortured By Qatar Secret Police

@wikisoon3

தொடர்ந்து அவர் மூன்று வாரங்கள் பொலிஸ் விசாரணையில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் உடைகளை களைந்து கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தமது நண்பர்களிடம் அவர் கூறியுள்ளார்.

மூன்று வாரங்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டும், கட்டார் விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மார்க் பென்னட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கட்டார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால், லிஸ் ட்ரஸ் பிரித்தானிய உள்விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் மார்க் பென்னட் விவகாரம் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது உள்விவகாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மார்க் பென்னட் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றே கூறியுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.