வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் விளம்பரம் கொடுத்து மோசடி செய்த நபரிடம் இருந்து 45 பாஸ்போர்ட் பறிமுதல் செய்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நல்லபெரட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வாசு என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் ஆசையில் இருந்து உள்ளார். கூலி வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தை வைத்து முகநூல் மூலமாக கிடைத்த விளம்பரத்தை பார்த்து மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர் கொடுத்த விளம்பரத்தை நம்பி அவரை தொடர்பு கொண்டு ஒரு லட்ச ரூபாய் பணத்தை வங்கி கணக்கு மூலம் அவருக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து வாசு பாண்டியன் தொடர்பு கொண்டு `எப்போது சிங்கப்பூருக்கு அனுப்புவீர்கள்?’ என கேட்டு வந்ததாக தெரிகிறது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வாசுவின் செல்போனை பாண்டியன் பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த வாசு, கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு மதுரைலிருந்த பாண்டியனை கைது செய்து அவரிடமிருந்து 45 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்தனர்.
லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்து சைபர் கிரைம் போலீசார் முகநூல் மூலமாக ஏமாற்றிய ஆன்லைன் குற்றத்திற்காக பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த பாரதிராஜா என்பவரையும் சைபர் கிரைம் போலீசார் தேடி வருகிறார்கள். பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM