ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் இலைமறை காயாக இருந்து வந்த தலைமை பதவிக்கான கோஷ்டி பூசல் ஆட்சியை இழந்த பின்னர் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த
மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை விட்டே நீக்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் பாஜக மேலிடம், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் என ஒரே நேரத்தில் 3 கதவுகளை தட்டியதால் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் தங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதி கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜேசிபி பிரபாகர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வைத்திலிங்கம் கூறியதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். கடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலராக தேர்வு செய்த தீர்மானம், ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானம் என்று அனைத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்கிற நம்பிக்கை உள்ளது.
அரசியலில் நாங்கள் ஜீரோ.. என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். ஆனால்.. இனி.. நாங்கள் ஹீரோ.. இவ்வாறு, ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் ‘இனி நாங்கள் தான் ஹீரோ’ என்று, ஒரே போடாய் போட்டு இருப்பதை பார்த்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பீதியில் உறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.