ரேசன் பொருட்கள் சப்ளையில் ஊழலா? – சர்ச்சைக்குள்ளான ‘அரசு ஆர்டர்’
பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களிடமிருந்தே மீண்டும் ரேசன் கடைகளுக்கான பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதில் 210 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகாருக்குள்ளான பொங்கல் பரிசுத் தொகுப்பு
கடந்த ஆண்டு மே மாதம் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்து, வருமானமின்றி தவித்தனர். அத்தகைய சூழ்நிலையில், திமுக அரசு கொரோனா நிவாரணத் தொகையாக நான்காயிரம் ரூபாயும், ரேசன் கடைகள் மூலமாக 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கியது. ஏழை, எளிய மக்களிடையே இது வரவேற்பைப் பெற்ற நிலையில், வழங்கப்பட்ட மளிகை பொருட்களும் தரமானதாக இருந்ததாக மக்கள் பாராட்டினர்.
* அதேபோன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது அரசு தரப்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பும் தரமானதாக இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், மாநிலத்தின் பல இடங்களில் பொருட்கள் தரமானதாக இல்லை எனப் புகார்கள் கூறப்பட்டன. இதனால் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
* ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதே என அப்போது ஸ்டாலின் அப்செட்டானதாகவும் செய்திகள் வெளியாகின. சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ‘பிளாக் லிஸ்ட்’டில் வைக்கவும் உத்தரவிட்டார்.
நிறுவனங்களின் ‘லாபி’
ஆனாலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு சர்ச்சை ஓயாத சூழ்நிலையிலேயே, சர்ச்சைக்குள்ளான நிறுவனங்கள் சில ‘லாபி’ மூலம், நியாயவிலைக் கடைகளுக்கான பருப்பு சப்ளைகளையும் கையில் எடுத்து விட்டதாக அப்போதே சர்ச்சைகள் வெடித்தன.
இதுகுறித்து 2022 ஜனவரி 26 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ் கழுகார் பகுதியில்,
“பொங்கல் தொகுப்பை வழங்கிய நிறுவனங்கள், ஒரு சிண்டிகேட் அமைத்து அமைச்சர் முதல் முதல்வர் தரப்பு வரை ஒரு லாபியை ஆரம்பத்திலேயே செட் செய்துவிட்டார்கள்.
பொங்கல் தொகுப்பில் கேந்திரியா பந்தர், ஐ.எஸ்.பி, அருணாச்சலா எண்டர்பிரைசஸ் ஆகிய மூன்று நிறுவனங்களே ஒப்பந்தம் எடுத்தன. அதில் கேந்திரியா பந்தர் நிறுவனத்தின் பின்புலத்தில், திருப்பூர் நிறுவனமும், ஐ.எஸ்.பி நிறுவனத்தின் பின்புலத்தில் சர்ச்சைக்குரிய முட்டை நிறுவனமும் இருந்துள்ளன.
* இதில் கொடுமை என்னவென்றால், பொங்கல் பரிசுத்தொகுப்பில் குளறுபடி செய்து, முதல்வரின் கோபத்துக்கு ஆளாகிய நிறுவனங்கள், அடுத்த சில நாள்களிலேயே புதிய ஆர்டர்கள் பெற்றுள்ளன.
* ‘முதல்வருக்குத் தெரிந்துதான் இதெல்லாம் நடக்கின்றனவா?’ என்று அந்தத் துறையிலுள்ள அதிகாரிகளே வேதனைப்படுகிறார்கள்…” என அப்போதே நிலைமையைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் செய்தி வெளியாகி இருந்தது.
பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய குழு அமைப்பு
இந்த நிலையில்தான், அடுத்த ஓரிரு மாதங்களில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, இந்த ஆண்டு மே மாதம் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கே மீண்டும் ஆர்டர்
ஆனால், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களிடமிருந்தே தற்போது மீண்டும் ரேசன் கடைகளுக்கான பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க தமிழக அரசின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர்கள் எப்படி தரமான பொருட்களை வழங்குவார்கள் என அரசின் முடிவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* ” பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
* தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதலமைச்சர் திரு.ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ?!
* இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை ‘நாங்கள் மட்டுமே உத்தமர்கள்’ என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்! ” எனக் கூறியுள்ளார்.
அதேபோன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் “தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப்படுத்துகிறது.
தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு செய்வதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில் ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் இழப்பு என்றாலும் கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது” எனக் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
பொதுச்செயலாளர் பதவி: உச்ச நீதிமன்ற உத்தரவால் இ.பி.எஸ்-க்குப் பின்னடைவா?
அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை நீடித்து வரும் நிலையில், அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தாக்கல் செய்த முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
பொறுப்பில் இருக்கும்போது தேர்தல் நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏன் அவசரப்படுகிறது? மேலும்…”
உச்ச நீதிமன்ற உத்தரவை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘ஓசி பயணம்’ சர்ச்சைப் பேச்சுக்கு பொன்முடி விளக்கம்!
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பெண்களுக்காக அரசு செய்துள்ள நலத்திட்டங்களைக் குறிப்பிட்டுப் பேசுகையில், ” நான்காயிரம் ரூபாய் குடும்ப அட்டைக்கு வாங்கினீங்களா? இப்போது பெண்கள் எல்லாம் எப்படி பயணம் செய்கிறீர்கள். கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்” என்று பேசிய வீடியோ வெளியானது.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்பட்டது. பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இது குறித்து பொன்முடி அளித்துள்ள விளக்கத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
டிரெண்டாகும் ஜெயில் டூரிசம்… ஒருநாள் வாடகை ஜஸ்ட் ₹ 500!
`நானும் ரவுடிதான்’ என்று வடிவேலு சொல்வதைப்போல நானும் சிறைக்குச் சென்று வந்தேன் என்று சொல்லிக்கொள்ள சிலருக்கு ஆசைதான். அதற்காக சிறைக்குச் செல்ல தரமான சம்பவங்களைச் செய்யவா முடியும்? முடியாது…
ஆனாலும் சிறைவாசத்தை சுற்றுலாவைப்போல அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்காகவே ஒரு சில மாநிலங்களில் உள்ள சிறைத்துறை, ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது .
மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று உண்மையா இல்லை கற்பனையா? – ஒரு பார்வை
பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கப்பட்டதையடுத்து, பல்வேறு மக்கள் இதற்காகவே ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை ஆர்வத்தோடு வாங்கி படித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், வரலாற்றாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் எந்தளவிற்கு வரலாற்று உண்மைகள் இருக்கின்றன?
எந்தெந்த கதாப்பாத்திரங்கள் கற்பனை கதாப்பாத்திரங்கள் என்று பொன்னியின் செல்வன் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘பொன்னியின் செல்வன்’ விமர்சனம்
வானில் தோன்றும் தூமகேது சோழ குல வேந்தர்களில் யாருக்குப் பாதகமாய் இருக்கப்போகிறது என்பதைச் சொல்கிறது பொன்னியின் செல்வனின் முதல் பாகம்.
நாவல்களை, புதினங்களைத் திரைப்படமாக உருமாற்றுவது என்பது ஒரு பெரும் கலை. அத்தியாயம் அத்தியாயமாக லயித்து லயித்துப் படித்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கற்பனை உருவம் நிச்சயம் இருந்திருக்கும். அந்தக் கற்பனைகள் திரையின் முன் வாசகனின் மனம் கோணாமல் விரிப்பது என்பது பெரும் சவால்.