PS1 Review: ’சோழனுக்கு எப்போதும் தோல்வியே இல்லை’ பொன்னியின் செல்வனை கொண்டாடும் ரசிகர்கள்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கல்கியின் புகழ்பெற்ற படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இன்று படமாக வெளிவந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சோழர் சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றை திரையில் எடுத்துக் காட்டும் படமாக வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் அதிகாலை ரிலீஸான இந்தப் படத்துக்கு பாசிடிவ் விமர்சனைங்களையே கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள். முதல் பாகத்தின் முதல் பாதி மெய்சிலிர்க்க வைக்கிறது என்றால், இரண்டாம் பாகம் புல்லரிக்க வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் நெட்டிசன் ஒருவன் அதிகாலை ஷோவை பார்த்து முடித்த கையுடன் டிவிட்டரில் போட்ட பதிவில், ’சோழனுக்கு தோல்வியே இல்லை.. வந்தான் வென்றான்’ எனத் தெரிவித்துள்ளார். சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் தங்களின் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாக கூறியுள்ள நெட்டிசன்கள், கார்த்தியின் காமெடி சூப்பராக கனெக்ட் ஆவதாக தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்துக்கு பெரிய பலமாக இருக்கிறது எனவும் பாராட்டியுள்ளனர். அதேநேரத்தில் விமர்சனம் நெகடிவ் சைடும் இருக்கிறது. பாகுபலி ரேஞ்சுக்கு படம் இருக்குமா? என பலரும் எதிர்பார்த்தனர். இந்த கேள்விக்கு இயக்குநர் மணி ரத்னம் இசை வெளியீட்டு விழாவின்போதே பதில் கூறிவிட்டார். பாகுபலி மாதிரி படம் இருக்குமா என லைகா நிறுவனர் சுபாஷ்கரன் கேட்டதற்கு, கல்கியின் பொன்னியின் செல்வனாக இருக்கும் என கூறினேன்… அப்படி தான் படமும் எடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

அந்த பதில் தான் பாகுபலி மாதிரி படம் இல்லையே என எதிர்பார்த்து சென்றவர்களுக்கான பதில். இன்னொரு விமர்சனம் என்னவென்றால், கதாப்பாத்திரங்களுக்கு பெரிய அறிமுகம் இல்லை, பிளாட்டாக இருக்கிறது என்றெல்லாம் விமர்சனமாக வைத்துள்ளனர். எப்படி இருந்தாலும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. மேலும், 2ஆம் பாகத்தில் வரவிருக்கும் கிளைமாக்ஸ் காட்சியை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.