RS mangalam பள்ளி வினாத்தாள் கசிவு விவகாரம்: தலைமையாசிரியர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

சென்னை: வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே 6,7,8-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக தலைமயைாசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 வகுப்புகளுக்கான அறிவியல் பாட முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத்தேர்வு நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அதற்கான வினாத்தாள் நேற்று முன்தினம் அந்த வகுப்புகளில் படித்து வந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தேர்வுக்கு முன்னரே அறிவியல் வினாத்தாள் வெளியானது குறித்த தகவல்கள், ஆசிரியர் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. அதனையடுத்து அந்த வட்டாரத்தின் முதன்மைக் கல்வி அலுவர் அ.பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். 

வட்டார முதன்மைக் கல்வி அலுவர் அ.பாலுமுத்துவின் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கு முதல் நாளே வினாத்தாள்கள் கொடுத்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் பல திடுக்கிடும் விவரங்கள் வெளியாகின. அறிவியல் பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியரிடம் வினாத்தாள்களை அந்த பள்ளியின் தலைமையாசிரியர் வழங்கியுள்ளார். தேர்வுக்கு முதல் நாளே வினாத்தாளைப் பெற்றுக் கொண்ட அறிவியல் ஆசிரியர் தேர்வுக்கு முதல்நாளே மாணவர்களிடம் வழங்கி விட்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வினாத்தாளில் உள்ள கேள்விகளை நன்றாக படித்து வரவும் அறிவியல் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். இந்த வினாத்தாளை பட்டதாரி கணித ஆசிரியர் படம் பிடித்து வெளியிட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

அதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்த தலைமையாசிரியர் எம்.மீனாம்பர், கணித ஆசிரியர் வி.டி.குமார்வேல், அறிவியல் ஆசிரியர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோரை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.