உ.பி: மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த புல்டோசர்.. கலாட்டா செயத பாஜக நிர்வாகியின் மனைவி!!

பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி அனு தியாகி தனது குடியிருப்பில் உள்ள ஒரு பொது இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை வைத்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள ‘கிராண்ட ஓமேக்ஸ் சொசைட்டி’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் பாஜக விவசாயப் பிரிவுத் தலைவர் ஸ்ரீகாந்த் தியாகி. 34 வயதான இவர் கடந்த மாதம் தனது குடியிருப்பில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை … Read more

ராஜபக்சே சகோதரர்களுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு| Dinamalar

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமான சுப்ரமணியசாமி இலங்கை சென்றுள்ளார். இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி விழா பூஜையில் கலந்து கொண்ட சுப்ரமணியசாமி, மறுநாள் முன்னாள் அதிபர் கோத்தபயாவையும் சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்து பேசிய, பாதுகாப்பு துறை தொடர்பான பல்கலையிலும் உரையாற்றினார். ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களையும் சுப்ரமணியசாமி … Read more

தமிழில் வெளியாகும் நாகார்ஜுனா படம்

பிஎஸ்வி கருடவேகா, சந்தமாமா உள்ளிட்ட பல தெலுங்கு ஆக்ஷன் படங்களை இயக்கிய பிரவீன் சத்தாரு இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் நார்த்ஸ்டார் எண்டர்டெய்மெண்ட் பேனர்ஸ் இணைந்து, தயாரித்திருக்கும் திரைப்படம் தி கோஸ்ட். இதில் நாகார்ஜுனா நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக டிக்டேடர், ரூலர் படங்களில் நடித்த சோனல் சவுகான் நடிக்கிறார். குல் பனாக் மற்றும் அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முகேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, மார்க் கே ராபின் இசை … Read more

அதிர்ச்சி! குழந்தைகளுக்கு வெறும் உப்பு கலந்து பள்ளியில் சத்துணவு!!

மதிய உணவுத் திட்டத்தில் வெறும் சாதத்தில், உப்பு கலந்து மாணவர்கள் சாப்பிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள அரசு பள்ளியில்தான் மதிய உணவுத் திட்டத்தில்தான் மாணவர்களுக்கு வெறும் சாதத்துடன் உப்பு கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து அப்பள்ளி முதல்வரை மாவட்ட ஆட்சியர் பணி இடை நீக்கம் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பதிவிட்டு முதல்வர் யோகி பாபா இதை பாருங்கள் என பெற்றோர்கள் பதிவிட்டு வருகின்றனர். 2019ஆம் … Read more

“என்னைப் பற்றி செய்தி போடுவியா? கொன்றுவிடுவேன்" – விகடன் செய்தியாளரை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் மீது காவல்நிலையத்தில் புகார்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி, தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்கு , பா.ஜ.க., சார்பில் திருநெல்வேலி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அதில், பொன் பாலகணபதி சசிகலா புஷ்பாவிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதற்கு பின்புலத்தில், … Read more

நவ.6-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தவும், அந்த ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதியளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் பிஎஃப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம்காட்டி, தமிழக அரசு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து … Read more

என்ன இவரும் இப்படி சொல்றாரு.?.. அப்போ நிஜமாவே அப்படி நடந்திடுமா!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: திமுகவைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் எப்பொழுதுமே அவர்கள் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து ஏமாற்றி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு அம்மா வழியில் ஆட்சியை கொடுத்திருந்தார்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய திருவிளையாடல் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது . தலைவர் (எம்ஜிஆர்) கட்சி ஆரம்பித்ததற்கு பின், 1989 … Read more

4 பகுதிகளை இணைத்த ரஷ்யா – 'நேட்டோ'வில் சேர உக்ரைன் அவசரம்!

நேட்டோ அமைப்பில் சேருவதற்கான விரைவுபடுத்தப்பட்ட விண்ணப்பத்தை, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமர்ப்பித்து உள்ளார். சோவியத் யூனியன் அமைப்பில் இருந்து விலகி உக்ரைன் தனி நாடானது. எனினும், அந்நாட்டின் மக்களின் மொழி, கலாச்சாரம், பண்புகள் உட்பட அனைத்தும் ரஷ்யா உடன் ஒத்துப் போவதால், அந்நாட்டை, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே, ரஷ்யா கருதி வருகிறது. இதற்கிடையே, நடப்பு ஆண்டு தொடக்கத்தில், பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் நாடு விருப்பம் … Read more

கூட்டு பாலியல் வன்புணர்வு : சிறுமியை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கொடூரம் – காவலரும் உடந்தை

உத்தரப் பிரதேசத்தின் மவு நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடிவந்துள்ளார். அவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பீகாரில் உள்ள ஜெய்நகருக்கு வந்துள்ளார். ஜெய்நகரில் உள்ள சந்தைக்கு வந்த சிறுமி, அங்கிருந்த ஒருவரிடம் வழி கேட்டுள்ளார். அப்போது, அர்ஜூன் யாதவ் என்ற அந்த நபர், சிறுமியை கடத்தி சென்று தனது இடத்தில் மறைத்து வைத்துள்ளார்.  மேலும், தனது மூன்று நண்பர்களை அழைத்து, அவர்களுடன் அந்த சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். … Read more

திரையரங்குகளில் வீடியோக்கள் எடுப்பது தவறு – இயக்குநர் கௌதம் வாசுதேவ்

சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு படம் மூலம் இயக்குநர் கௌதம் வாசுதேவும் கம்பேக் கொடுத்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகம் வெற்றியை அடுத்து அவர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இந்தச் சூழலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஒரு பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் … Read more