திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலுக்கு அக்டோபர் 7ந்தேதி வேட்பு மனு தாக்கல்!

சென்னை: திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளிக்கலாம் என  திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்த நிலையில், தற்போது,  திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 7-ஆம் தேதி வேட்புமனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு … Read more

கேரளா மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன் வலம் வரும் தாய் யானை: ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்

மேட்டுப்பாளையம்: கேரள மாநிலம் சாலக்குடி அதிரப்பள்ளி வனப்பகுதியில் தாயுடன் இரண்டு குட்டி யானைகள் நடமாடும் காட்சி யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வனத்துறையினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரே உயரத்தில், ஒன்று போல் காட்சியளிக்கும் இரு குட்டியானைகளும் தாயுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு குட்டி யானைக்கு மட்டும் தந்தம் சற்று நீளமாக உள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் இதே வனப்பகுதியில் தாய் யானையுடன் இந்த இரு குட்டியானைகளையும்  வனத்துறையினர் பார்த்துள்ளனர். ஆறு … Read more

வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் கடைபிடிக்கப்படும் திராவிட மாதத்தின் கடைசி நாளான இன்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார். செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு சமூக வலைதளத்தில் பகிர வேண்டும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூரை ஆதரிக்காமல் அதிர்ச்சி கொடுத்த அதிருப்தி தலைவர்கள்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூரை அதிருப்தி தலைவர்கள் ஆதரிக்காமல் அதிர்ச்சி தந்துள்ளனர். காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து கட்சி செயல்பாட்டில் மாற்றம் வேண்டும் என 23 தலைவர்கள் குரல் எழுப்பினர். ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, புபிந்தர்சிங் உட்பட 23 தலைவர்கள் கையெழுத்திட்டு 2020-ல் சோனியாவுக்கு கடிதம் எழுதினார்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வைரக்கல் திருட்டு? – விவசாயி குற்றச்சாட்டு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வைரக்கல் திருடப்படுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத் தீர்வுக் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் திருநெல்வேலி நயினார் குளம், பாளையங்கால்வாய் பகுதிகள் தூர்வாரும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும், வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து தங்கும் கங்கை கொண்டான் குளத்தில் இருக்கும் … Read more

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட ’பிரதமர் மோடி’ சென்ற கார்- இணையத்தில் வைரல்.!

குஜராத் மாநிலம் காந்தி நகரில் இருந்து அகமதாபாத்துக்கு சென்ற போது பிரதமர் மோடி சென்ற கார் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அகமதாபாத்தில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதன் பின்னர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து மகிழ்ந்தார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக … Read more

அல்லு அர்ஜூன் குடும்பத்துடன் பொற்கோவிலில் சாமி தரிசனம்

புஷ்பா படத்திற்கு பிறகு பான் இண்டியா நடிகர் ஆகிவிட்டார் அல்லு அர்ஜூன். அடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் வருகிற 3ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐதராபாத்தில் அல்லு அர்ஜுன் கட்டியுள்ள அல்லு ஸ்டூடியோவின் திறப்பு விழா நடக்க இருக்கிறது. இந்த ஸ்டூடியோவில்தான் புஷ்பா படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது. இதை தொடர்ந்து அல்லு அர்ஜூன் தனது மனைவி சினேகா ரெட்டி , குழந்தைகள் அயான் மற்றும் … Read more

நோ சொன்ன அதிமுக.. ஓகே சொன்ன திமுக.. கெயில் நிறுவனம் மூலம் குழாய் எரிவாயு..- அமைச்சர்.!

சென்னை கமலாலயத்தில் மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தேல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியபோது, “கெயில் நிறுவனம் மூலமாக எரிவாயு இணைப்பை குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கும் திட்டத்தை அதிமுக அரசு அனுமதிக்கவில்லை. எனவே தான் அதை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  தற்போது திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் இதன் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படும் பொழுது எரிவாயுவின் விலை குறைவாக இருக்கும். தமிழ்நாட்டில் … Read more

பட்டு வேட்டி சட்டை அணிந்து விருதைப் பெற்றுக் கொண்ட சூர்யா!!

டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன. சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய … Read more