ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்ட பிரதமர் மோடி – வைரல் வீடியோ!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமாக குஜராத்துக்கு சென்றுள்ளார். 2ஆவது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்ட்ரல் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். முன்னதாக இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க காந்தி நகரில் இருந்து அகமதாபத்துக்கு பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி நகர் – அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் வருவதை கண்டார். உடனடியாக தனது பாதுகாப்பு … Read more

7 படகுகள், 10 குதிரைகள், சொந்தமாகத் தீவு வாங்கிய இந்தியப் பாடகர்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

1977-ம் ஆண்டு பிறந்த பிரபல பஞ்சாபி பாடகர் மிகா சிங் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர். இவர் பாடிய ஏராளமான திரைப்படப் பாடல்கள் ரசிகர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இவர் ஒரு பாப் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகா சிங் ‘Swayamvar-Mika Di Vohti’ என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். இந்நிலையில் தற்போது பிரபல பாடகராக இருக்கும் மிகா சிங் சொந்தமாக ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார். அந்த தீவில் ஒரு ஏரியும் … Read more

122 ஆண்டுகளில் இல்லாத அளவு | தமிழகம், புதுவையில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் 477 மி.மீ மழை பதிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவ மழை காலத்தில் அதிக அளவு மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவ மழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையைத் தான் இந்திய விவசாயிகள் பிரதானமாக நம்பியிருக்கின்றனர். இதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழைக் காலம் முன்கூட்டிய தொடங்கியது. தென்மேற்கு பருவ மழையானது … Read more

ரேஷன் ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு; கட்டாயம் கடைபிடித்திட அறிவுறுத்தல்!

வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. சுழற்சி முறையை பயன்படுத்தி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறைவு வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை … Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மீண்டும் அனுமதி; காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ்நாடு முழுவது பல்வேறு இடங்களில் அக்.2ஆம் தேதி அன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதைத்தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை காரணமாக கூறி, வரும் அக்.2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க இயலாது என காவல் துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு, … Read more

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.72 அடியாக சரிவு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை தணிந்ததால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் 9,500கனஅடியாக நீடிக்கிறது. அங்கு ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 12,303 கனஅடியாகவும், மாலையில் 11,212 கனஅடியாகவும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 10,497கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 … Read more

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் ரவுடி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

சென்னை: சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் ரவுடி ஆகாஷ் (21) உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை உட்கொண்டதால் ரவுடி ஆகாஷ் நேற்று உயிரிழந்தார். ரவுடி ஆகாஷ் மரணம் குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வந்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் செல்வதற்காக பாதுகாப்பு வாகனத்தை வழிவிட சொன்ன பிரதமர் மோடி

அகமதாபாத்: மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்டார். காந்திநகர், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று சென்றுள்ளார். ஆமதாபாத்தில் நேற்று 36-வது தேசிய விளையாட்டு போட்டியை அவர்  துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2-வது நாளான இன்று காந்திநகர் … Read more

திடீரென மூடப்படும் நூற்றாண்டுகால அரசு கல்லார் பழப்பண்ணை.! அதிர்ச்சியில் மக்கள்!

யானைகளின் வலசை பாதையில் அமைந்துள்ளதால் சென்னை உயர்மன்றதின் உத்தரவின் பேரில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான கல்லார் பழப்பண்ணையை மூட எடுக்கப்படும் நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் என்னுமிடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது அரசு கல்லார் பழப்பண்ணை. நீலகிரி மலையடிவாரத்தில் நீர்வளமும் மண்வளமும் மிகுத்த இப்பகுதியில் கடந்த 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது இப்பழப்பண்ணை. சுமார் இருபது ஏக்கர் பரப்பளவில் அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான … Read more