சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த உள்ளதை ஒட்டி போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த உள்ளதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்.2 முதல் 31 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக போக்குவரத்து போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரம்: முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதற்கட்டமாக நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரிடம் 165 பக்க … Read more

தமிழகத்தில் அக்.2க்கு பதிலாக நவ.6-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தலாம் – உயர்நீதிமன்றம் அனுமதி

அணிவகுப்பு ஊர்வலத்தை அக்டோபர் 2-ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ம் தேதி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ம் தேதிக்குள் அதற்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்ததுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 30-க்கும் … Read more

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 1ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு இடங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வெப்ப மண்டல மாற்றங்களால் ஆந்திராவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் … Read more

சூர்யா முதல் மடோன் அஸ்வின் வரை.. குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது பெற்ற தமிழ் பிரபலங்கள்!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 68-வது தேசிய விருதுகளுக்கு தேர்வான பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். ஆண்டுதோறும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அதில் பணிபுரிந்த கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் திரைப்பட விழா இயக்குநரகம் தேசிய விருதினை அறிவிக்கும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேசிய விருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2020-ம் ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கான 68-வது … Read more

பணம் பறித்து வந்த நபரை கொலை செய்த சிறுவர்கள்

புதுடில்லி : டில்லியில் மது குடிப்பதற்காக மிரட்டி பணம் பறித்து வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த மூன்று சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு சுல்தான்புரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் ௩௦. இவர் தன் வீட்டு அருகேயுள்ள சிறுவர்களை அடித்து மது அருந்துவதற்காக அடிக்கடி பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவர்கள் மூன்று பேர் சேர்ந்து நேற்று முன் தினம் … Read more

ஆதார் இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த 'ஆதார்' படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றாலும் தியேட்டர்களில் பெரிய வசூலை பெறவில்லை. என்றாலும் ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ஆதார் படத்திற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை … Read more

டாஸ்மாக் பார் உரிமை டெண்டர் ரத்து! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதிய டெண்டர் விடும்போது ஆட்சேபனை இல்லா சான்றிதழ் அவசியம்!  டாஸ்மாக் கடைக்கு அருகில் வாடகை இடத்தில் பார் நடத்த உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பாணைக்கு தடை கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் இப்படை 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

சர்ச்சையில் சிக்கியுள்ள இயக்குநர் செல்வராகவன்!!

11 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் ‘நானே வருவேன்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களுக்கிடையே வரவேற்பை பெற்று வருகிறது. சைக்கோ த்ரில்லராக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த செல்வராகவன், தமிழ்நாட்டில் தனக்கு படம் பண்ண பிடிக்கவில்லை என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் கூட மாற்று சினிமா எடுக்கிறார்கள், ஆனால் தெற்கில் மட்டும் எதுவும் மாறவில்லை, நானும் 13 வருஷமா பார்க்கிறேன். … Read more

பட்டு வேட்டி சட்டை அணிந்து விருதைப் பெற்றுக் கொண்ட சூர்யா!!

டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன. சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய … Read more