தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 1,66,48,608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு! சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 1,66,48,608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கள்ள ஓட்டுப்போடுவதை தடுக்க ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் ஓட்டு சாவடி மையங்களுக்கு சென்று ஓட்டுச் சாவடி நிலை அலுவலரிடம் படிவம், … Read more

திண்டுக்கல் அருகே காரில் கடத்தி வந்த 270 கிலோ குட்கா பறிமுதல்: ஓட்டுநர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காரில் கடத்தி வந்த 270கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சிவகுமார் (29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட முயன்ற வழக்கில் குற்றவாளிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட முயன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ஆனந்த் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

டெல்லியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங்

டெல்லி: இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் கண்டுபிடித்த செர்வாவேக் தடுப்பூசியை டெல்லியில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் அறிமுகம் செய்து வைத்தார். இதுவரை வெளிநாட்டில் இருந்தே தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் செர்வாவேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை – பல்வேறு ஊர்களில் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் காலை 10.30 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் ஒரு சில இடத்தில் லேசான மழை பதிவாகியது. இதில் கோயம்பேடு, வடபழனி, எம்.எம்.டி.ஏ, அசோக் நகர், தி.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் லேசான மழை பெய்துவருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஒட்டிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை … Read more

வணிக சிலிண்டர் விலை குறைப்பு| Dinamalar

புதுடில்லி: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.2,405 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இந்நிலையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான காஸ் விலை ரூ.91.50 குறைத்துள்ளது. டில்லியில் ரூ.1885க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,045 ஆக விற்பனையாகிறது. அதேநேரத்தில், வீட்டு … Read more

விஜய் கனிஷ்கா, மற்றுமொரு 'விஜய்' நடிகர் அறிமுகம்

தமிழ் சினிமாவில் ஒரே பெயரில் அதிக பிரபலமில்லாத சில நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழில் தற்போதைய வசூல் நடிகர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் நடிகர் விஜய். இந்த 'விஜய்' என்ற பெயரை தங்களது முதல் பெயராகவோ, இடைப் பெயராகவோ வைத்துள்ள பல நடிகர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, விஜய் வசந்த், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பல நடிகர்களும் 'விஜய்' என ஆரம்பிக்கும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் எனப் பலரும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது … Read more

தேவையற்ற கருத்துகளை யூடியூபில் பேசுவது ஃபேஷனாகிவிட்டது: கனல் கண்ணன் விவகாரத்தில் நீதிபதி கருத்து

சென்னை: பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசிய வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு கொடுத்திருந்தார். இந்த வழக்கில் கைதான கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியார் சிலையை உடைப்பேன் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்த கனல் கண்ணன், தற்போது அரசியல் பக்கம் கரை ஒதுங்கியுள்ளார். இந்நிலையில், … Read more

செக் பவுன்ஸ், செக் மோசடியா.. இனி கொஞ்சம் அலர்ட்டா இருங்க.. !

டெல்லி: பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆவது மற்றும் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் சமீபத்தில் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி முதல் கட்டமாக டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சிறந்த நீதி மன்றங்களை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. செக் பவுன்ஸ் மற்றும் செக் மோசடி வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து … Read more

ஜனாதிபதியின் வீட்டில் திருட்டு : சந்தேக நபர் கைது

போராட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்து வெளிநாட்டு மதுபான போத்தல்களை களவாடியதாக கூறப்படும் நபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்த எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே (30) உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் இல்லத்திற்குள் புகுந்து திருடப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தலுடன் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். … Read more