4 மாவட்டங்களுக்கு விடுமுறை: 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்றும் மழை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் … Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு.!

ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள குவாலர் தெருவில் விநாயகர் சிலை வைத்து கும்பிடபட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நடைப்பெற்ற ஊர்வலத்தில் சப்பரம் வளைவில் திருப்பிய போது மரத்தின் மீது மோதியதில் விளம்பர பலகை சப்பரத்தில் விழுந்ததில் … Read more

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், காவலர்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லை என்றும், பெண்கள் நகை அணிந்து தைரியமாக வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 8 வழி சாலை திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்த்த திமுக, தற்போது ஆதரிப்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார். தமிழகத்தில் கஞ்சா விற்பனை பரந்து விரிந்துள்ளதாகவும், கஞ்சா குறித்து விழிப்புணர்வு நடத்த வேண்டிய சூழ்நிலை … Read more

பாம்பாறு அணை 4வது மதகில் உடைப்பு: அதிகளவில் நீர் வெளியேறியதால் விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் 4வது மதகு உடைந்து தண்ணீர் அதிகளவில் வெளியேறியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை கடந்த 1983ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 587 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணைக்கு, திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் பெய்யும் மழை நீரும், பெனுகொண்டாபுரம் ஏரியில் மூலம் வரும் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரும், நீர் ஆதராமாக உள்ளது. இந்த அணையில் 280 மில்லியன் கனஅடி தண்ணீர் … Read more

பாகிஸ்தான் வெள்ளத்தால் 30 லட்சம் குழந்தைகள் பாதிப்பு: யுனிசெப் அமைப்பு தகவல்

நியூயார்க்: பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி 30 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யுனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: பாகிஸ்தானில் அண்மையில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்ணீரால் பரவும் நோய்கள், வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு, போதிய உணவின்றி ஊட்டச்சத்து குறைபாடு என பல்வேறு வழிகளிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 30 லட்சம் குழந்தைகளாவது மனிதாபிமான … Read more

கனல் கண்ணனுக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்றது. அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென கடும் ஆக்ரோசமாக பேசியிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் … Read more

இந்தியா- சீனா தளபதிகள் சந்திப்பு.. லடாக்கில் பதற்றத்தை தணிக்க ஆலோசனை..!

லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனா ராணுவ மேஜர் ஜெனரல்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 16 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இருநாட்டு ராணுவ மேஜர் ஜெனரல்கள் தங்கள் படைத்தளபதிகளுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அசல் எல்லைக் கோடு பகுதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் அமைதியை கடைபிடிக்க இருதரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை கடைபிடிக்கவும் இதுபோன்ற முன்னறிவிக்கப்படாத ராணுவ பேச்சுவார்த்தைகள் … Read more

செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம்

இளம்பெண்கள் இருவரின் செல்பி மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்துள்ளது. இந்த துயர சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 பேர் கொண்ட குடும்பம் ஒன்று, கடந்த ஞாயிறன்று, Ramdaha என்னும் நீர்வீழ்ச்சிக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்கள். அப்போது, ஷ்ரதா (14) மற்றும் ஷ்வேதா சிங் (22) ஆகிய இருவரும் செல்பி எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்க, ஷ்ரதா கால் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்திருக்கிறாள். உடனே, அவர்களுடைய சகோதரரான ஹிமான்ஷு சிங் (18), உறவினரான … Read more

பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

உடுமலை:  உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இதில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுள் ஒருங்கே அமைந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலின் மேற்பகுதியில் பஞ்சலிங்க அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டுவதால் … Read more