5 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாத க்ரீமி லேயர் வரம்பு: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: க்ரீமி லேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்தி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக நீதியை மத்திய அரசு காக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தேசிய அளவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உயர்கல்வி … Read more

தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற பொங்கலூர் பழனிசாமி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது உரையாற்றிய அவர், “திமுக தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 சதவீத வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும். மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நானும் அவ்வப்போது … Read more

ரணில் அரசாங்கத்திற்கு மகிழ்ச்சி கொடுத்த சர்வதேச நாணய நிதியம்! சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச நாணய நிதியம் சற்று முன் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.  சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதற்கான பணியாளர் மட்ட உடன்பாடே எட்டப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் … Read more

தாமதமாகும் ஏகே 61 – காரணம் என்ன?

நேர்கொண்ட பார்வை,  வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித் இயக்குநர் வினோத்துடன் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மஞ்ச் வாரியர் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மும்முரமாக நடந்தது. சுமார் 50 நாட்களுக்கு மேல் நடைபெற்ற அந்த படப்பிடிப்பில், நடிகர் அஜித் கலந்து கொண்டு நடித்தார்.  70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், அஜித் வெளிநாடு சென்றார். … Read more

மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துவதாக கூறியுள்ளார். புலித்தேவனின் வீரமும், உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருவதாகவும், முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட அவர், மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை குற்றம் சொல்லவேமுடியாது… பிரித்தானியாவில் உயிரிழந்த கேரள மாணவர்களுக்கு நண்பர்கள் புகழாரம்

கேரள பின்னணி கொண்ட மாணவர்கள் இருவர் பிரித்தானியாவில் ஏரி ஒன்றில் மூழ்கி உயிரிழந்தார்கள். அவர்களை எந்த குற்றமும் சொல்லமுடியாது, அவ்வளவு நல்லவர்கள் என மனமாரப் புகழ்கிறார்கள் நண்பர்கள். வட அயர்லாந்தில் ஏரி ஒன்றில் மூழ்கி உயிரிழந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் குறித்து அறிந்த அனைவருமே அவர்களை மனமாரப் புகழ்கிறார்கள். வட அயர்லாந்திலுள்ள Derry என்ற இடத்தில் வாழும் சில மாணவர்கள், திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில், Enagh Lough என்ற ஏரியில் நீந்தச் … Read more

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மூளைச்சாவு அடைந்த 1,548 பேரிடம் 9,257உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ஓமந்தூரார் அரசினர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில்  இருதயம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபரை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.  அவருடன்  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை … Read more

ஜெ. மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

கோவை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். அறிக்கைகளை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம்; பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம். விசாரணை அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

பெரியார் சிலை சர்ச்சை பேச்சு: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: பெரியார் சிலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 4 வார காலத்துக்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   

முன்பதிவு செய்யப்பட்ட ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 5% ஜிஎஸ்டி: ஒன்றிய அரசின் அறிவிப்பால் ரயில் பயணிகள் அதிர்ச்சி..!!

டெல்லி: முன்பதிவு செய்யப்பட்ட ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் கேன்சலேஷன்  கட்டணத்துடன் சேர்த்து 5 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதாவது முதல் வகுப்பு ஏசியில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்யப்பட்டால் வழக்கமாக பிடிக்கப்படும் 240 ரூபாயுடன் 5 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து 252 ரூபாயாக வசூலிக்கப்படும். அதேபோல இரண்டாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட்டாக இருந்தால் 200 ரூபாயுடன் … Read more