விருதுநகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விபத்து: சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் பலி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நேற்று இரவு (ஆக்.31) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின் கடத்தி மீது சப்பரம் மோதியதில் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சொக்கநாதன்ம் புத்தூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே குலாலர் தெருவில் விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. ஊர்வலத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து … Read more

Vodafone Idea 5g Plan: 5G சேவையை அறிமுகப்படுத்த பழைய சேவை கட்டணத்தை மாற்ற போகும் வோடபோன் ஐடியா!

இந்திய டெலிகாம் துறையில் நீயா நானா என்று போட்டி போட்டு கொண்டு 5G சேவையை யார் முதலில் அறிமுகப்படுத்துவது என்ற ஓட்டத்தில் பல முன்னணி நிறுவனங்கள் ஓடி கொண்டிருக்கின்றன. இதில் முன்னணி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெலை தாண்டி வரிசையில் அடுத்து இருப்பது வோடோபோன் ஐடியா தான். இந்தியாவின் டெலிகாம் துறையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வோடோபோன் ஐடியா நிறுவனமும் 5G சேவைக்கான ஓட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. முதலில் வருவதை இலக்காக வைக்காமல், குறைந்தபட்சம் அடுத்த ஆண்டுக்குள் … Read more

அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த மருத்துவரால்  பரபரப்பு: வீடியோ வைரல்

அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த மருத்துவரின் செயல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர் நடந்துகொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளியை வேறு வழி இல்லாமல் தூக்கிச் சென்ற அவலமும் நிகழ்ந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 67 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சிகிச்சைக்காக முக்கிய சிகிச்சை மையமாக கருதப்படுவது ஏற்காடு அரசு மருத்துவமனை. ஏற்காட்டில் ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் சிறிய அளவில் மருத்துவமனைகள் இருப்பினும் … Read more

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை.. இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஜெய்ஷே முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையின் போது பொதுமக்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Source link

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இரண்டு தமிழர்கள் செய்த அசத்தலான சாதனை! குவியும் பாராட்டுகள்

லண்டன் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழர்கள். பிரமோத்குமார், ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் குவியும் பாராட்டு  லண்டனில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் தமிழர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி நடக்கிறது. அந்த போட்டி கடந்த மாதம் நடந்தது. போட்டியில் இந்தியா சார்பில் 160 பேர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். லண்டனில் தொடங்கி ஸ்காட்லாந்து தலைநகரான இடின்பராக் வரை … Read more

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்த 9ம் வகுப்பு மாணவர்கள்! இது ஜார்கண்ட் களேபரம்…

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வில் தோல்வி அடைந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர், தாங்கள் படித்து வந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இநத சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்துக்கு தலைகுனியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநில கல்வி கவுன்சில் கடந்த சனிக்கிழமை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில், ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள ஒரு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், … Read more

சென்னையில் இந்த முறை வெள்ளப் பாதிப்பு ஏற்படாது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: சென்னையில் கடந்தமுறை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்த முறை பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். ரூ.935 கோடி செலவில் சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார். 

திருச்சி – கல்லணை இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பேருந்துகள் செல்ல தடை

திருச்சி : திருச்சி உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் திருச்சி – கல்லணை இடையே பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி கொள்ளிடத்தில் 1.95 லட்சம் நீர்வரத்து உள்ளதால் உத்தமர்சீலி தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

பூலித்தேவர் பிறந்தநாள்; மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.! பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

டெல்லி: மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் … Read more

நிதி நிறுவன மோசடி: 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது

மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார். மதுரையில் பி.ஜி. மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி 170 பேரிடம் 3 கோடியே 70 லட்சம் ரூபாயை பெற்று, திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக கடந்த 2013-ம் ஆண்டு மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யபட்டது. இந்த வழக்கில் குற்றவாளியான தனிகைமலை (49) என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் … Read more