எல்லை பதற்றத்தை தணிக்க கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

India oi-Mathivanan Maran ஶ்ரீநகர்: எல்லைகளில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருகிறது. … Read more

இந்தியாவில் புதிதாக 7,946 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் மேலும் 7,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,946 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,36,339 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 9,828 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,38,45,680 ஆனது. தற்போது 62,748 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் … Read more

புதிய முடிவோடு சினிமாவுக்கே திரும்பி வரும் ரம்யா: எல்லாமே அதுக்காகத்தானாம்

பெங்களூரு: தென்னிந்திய திரையுலகில் ரொம்பவே பிரபலமானவர் நடிகை ரம்யா. முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்யா, அரசியலிலும் காங்கிரஸ் எம்பியாக பெரிய ரவுண்டு வந்தார். இந்நிலையில், நடிகை ரம்யா மீண்டும் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கன்னடத்தில் அறிமுகம் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் ‘அபி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா. தொடர்ந்து கன்னடத்தில் ஆகாஷ், கௌரம்மா, ஜோதே ஜோதியாளி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார். கன்னடத்தில் இருந்து தமிழுக்கும் … Read more

சாமி படங்களுடன் ஜெயலலிதா படம்: சசிகலா நடத்திய விநாயகர் பூஜை

வி.கே. சசிகலா வீட்டில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் சாமி படங்களுடன் ஜெயலலிதாவின் படங்களும் இடம் பெற்றுள்ளது. நேற்று விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு சசிகலா சென்றார். ஜெயலலிதாவின் விட்டிற்கு வெளியே உள்ள ஜெய்கணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டார். அவருடன் இளவரசியும் இருந்தார். இதைத்தொடர்ந்து தனது இல்லத்தில் பூஜை செய்தார். இதில் சாமி படங்களுடன் ஜெயலலிதாவின் படங்களும் இடம் பெற்றது. … Read more

“மாநிலத்தின் சாபக்கேடு நீங்கள்; என் செருப்பளவுக்குக் கூட…!" – பி.டி.ஆர் மீது அண்ணாமலை தாக்கு

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் உட்பட 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் விமான நிலையத்தில் அவரின் கார் மீது செருப்பை வீசினர். அரசியல் வட்டாரங்களில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த நிலையில், … Read more

வேற மாறி வேற மாறி டீசலுக்கு எக்ஸ்ட்ரா டேங்க்… புதுச்சேரி செல்லும் லாரிகள்..!

தமிழகத்தை விட புதுச்சேரியில் டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறைவாக இருப்பதால், சரக்கு லாரிகள் ‘எக்ஸ்ட்ரா டேங்க்’ பொருத்தி டீசல் நிரம்பிக் கொண்டு வெளி மாநிலங்களுக்குச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாக உள்ள நிலையில், புதுச்சேரியில் 86 ரூபாய் 45 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லிட்டருக்கு 8 ரூபாய் வரை விலையில் வித்தியாசம் இருப்பதால் தமிழகத்தில் இருந்து … Read more

கனமழை எதிரொலி: தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தனர். தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி … Read more

லைகர் ஏன் தோல்வியடைந்தது?… நடிகையின் விளக்கம்

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்தப் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பெருகினர். மேலும், சமூக வலைதளங்களில் பல பெண்களின் க்ரஷ்ஷாகவும் மாறினார் அவர். அர்ஜுன் ரெட்டி படத்துக்கு பிறகு கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என்று பல  படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான நோட்டா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தச் சூழலில், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் இவர் நடித்திருந்த … Read more

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி.!

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13 புள்ளி 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வேளாண்மை, சேவை ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.  இதே காலாண்டில் சீனா வெறும் பூஜ்யம் புள்ளி 4 சதவீத பொருளாதார வளர்ச்சியையே எட்டி உள்ளது. இதன்மூலம் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. முதலாவது காலாண்டில், நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு … Read more