ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பது ஒற்றுமைக்கான யாத்திரை! ஜெய்ராம் ரமேஷ்

சென்னை: ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பது ஒற்றுமைக்கான யாத்திரை என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமைக்கான யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி  குமரியில் தொடங்குகிகறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையான, இது சுமார் 3500 கிலோ மீட்டர் தூரமாகும். இதை  150 நாட்களில்  கடக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்கான … Read more

உடல் முழுவதும் தங்க நகைகள்! அப்படியே புதைக்கப்பட்ட கோடீஸ்வர பெண்ணின் சடலம்.. புகைப்படங்கள்

தங்க நகைகளுடன் சேர்த்து புதைக்கப்பட்ட கோடீஸ்வர பெண்ணின் சடலம். 6500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என கண்டுபிடிப்பு. ருமேனியாவில் உள்ள கல்லறையில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரும் கோடீஸ்வர பெண்ணின் சடலத்துடன் 169 தங்க மோதிரங்கள், வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான் இதை கண்டுபிடித்துள்ளனர். குறித்த பெண்ணின் உடல் எலும்புகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட போது உடன் இந்த நகைகள் சேர்ந்து புதைக்கப்பட்டதாக அருங்காட்சியக இயக்குனர் கேப்ரியல் மொய்சா கூறியுள்ளார். எலும்புக்கூட்டின் … Read more

புளியந்தோப்பு சரகத்தில் 176 விநாயகர் சிலைகளுக்கு 200 போலீசார் பாதுகாப்பு

பெரம்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புளியந்தோப்பு சரகத்தில் வைக்கப்பட்டுள்ள 176 விநாயகர் சிலைகளுக்கு 200 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி இந்து அமைப்புகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் என பலரும் தங்களது பகுதியில் விநாயகர் சிலைகளை வைத்துள்ளனர். அந்த வகையில் வட சென்னைக்கு உட்பட்ட புளியந்தோப்பு சரகத்தில் ஆண்டுதோறும் அதிகமாக விநாயகர் சிலைகளை வைப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம் இந்து … Read more

ஆந்திரா, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மூட்டைகளில் க்யூ ஆர் கோட்: தமிழக அரசு அதிரடி முடிவு

சென்னை: ஆந்திரா, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மூட்டைகளில் க்யூ ஆர் கோடை அச்சிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் அரிசி எந்த குடோனில் இருந்து கடத்தப்பட்டது என்று கண்டறிவதில் தாமதம் ஏற்படுவதை சரி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன்: பிரதமர் மோடி டிவிட்

டெல்லி: மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சத்தியமங்கலம்: ஆபத்தை உணராமல் காட்டாற்றை கடந்து செல்லும் மலைகிராம மக்கள்

அருகியம் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம்: ஆபத்தை உணராமல் மலைகிராம மக்கள் வெள்ளநீரில் நடந்து செல்கின்றனர். சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு சத்தியமங்கலம், கடம்பூர் சென்று வருகின்றனர். இந்நிலையில், கடம்பூர் மற்றும் மாக்கம்பாளையம் இடையே குரும்பூர், அருகியம் ஆகிய இரு பள்ளங்கள் ஓடுவதால் வெள்ளம் வடிந்த பிறகு பள்ளங்களை கடந்து செல்கின்றனர். இந்நிலையில், சில தினங்களாக பெய்த கன மழையால் குரும்பூர் … Read more

புதுவையில் இரட்டை குடியுரிமை பிரச்னைக்கு சென்டாக் கிடுக்கிப்பிடி!| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் கலை – அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ‘சென்டாக்’ மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தாண்டு ‘சென்டாக்’ மூலம் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங் முதல் கட்டமாக, ‘நீட்’ மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.இவர்களுக்கு, ஒரு வாரத்திற்குள் முதற்கட்ட கணினிவழி கலந்தாய்வு மூலம் ‘சீட்’ ஒதுக்கப்பட உள்ளது.அடுத்தகட்டமாக, ‘நீட்’ … Read more

கோப்ரா முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சீயான் விக்ரமுக்கு கிடைத்த செம்ம ஓப்பனிங்

சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. கோப்ரா படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பால், முதல் நாள் வசூலிலும் சாதனை படைத்துள்ளது கோப்ரா. பிரம்மாண்டமாக வெளியான கோப்ரா டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தரமான படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். விக்ரம், அஜய் ஞானமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் என மெகா கூட்டணியில் மிகப் … Read more

திடீரென சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 1716 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. 2018ம் ஆண்டுக்கு பிறகு மாதாந்திர அளவில் தங்கம் விலையானது, ஆகஸ்ட் மாதத்தில்ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து 5வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் சரியலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக இன்று கவனிகக் வேண்டிய விஷயங்கள் என்ன? முக்கிய லெவல்கள் … Read more