10.4 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் மன்னாரில் இருவர் கைது

மன்னார் வீதித் தடையில் நேற்று (31) காலை  10.4 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி ரூ. 150 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து வங்காலை பகுதிக்கு கெப் வண்டியில் போதைப்பொருளை கொண்டு செல்ல இருவரும் முயற்சித்த வேளையில் அவர்களை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக இராணுவப் படையினர் குறித்த சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சாம்சங்கின் வேற லெவல் கேட்ஜெட்ஸ்!

கல்லிலே கலை வண்ணம் கண்டார்’ என்பதாக தினுசு தினுசாக மொபைலில் என்ன செய்ய முடியும் என யோசித்துக் கொண்டிருக்கிறது தென் கொரிய நிறுவனமான சாம்சங். மிட்பட்ஜெட் செக்மென்ட்டை மொத்தமாய் சீன நிறுவனங்கள் பிடித்துக் கொள்ள, இனி மார்க்கெட்டில் மீண்டும் காலூன்ற வேண்டுமென்றால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறது. வெறுமனே ரேமை அதிகப்படுத்துவது, கேமராக்களை மூன்று, நான்கு, ஐந்து என ரயில் கம்பார்ட்மென்டுகளைப்போல ஏற்றிக்கொண்டே செல்வது மட்டும் விற்பனைக்கு உதவாது என்பதை அறிந்தே … Read more

பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம்..!

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்பட்டியில் பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர்புகுந்தது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி, கோம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஏற்காடு மலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அரூர்-சேலம் பிரதான சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகனங்கள், சிறிய ரக கார்கள் வெள்ளத்தில் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றன. சேலம் மாவட்டம் … Read more

இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 64 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், 64 பேரும் தலா ரூ. 20 ஆயிரத்தை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 11 அன்று இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆ தரவாளர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டது. அதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. … Read more

பெண்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு.. டெல்லியில் இன்று தடுப்பூசி அறிமுகம்!

இந்திய அளவில் 15 முதல் 44 வயது பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடம் வகிப்பது கருப்பை வாய் புற்றுநோய். ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் மூலம் ஏற்படும் இந்த தொற்று பெண்களின் உயிருக்கே ஆபத்தாக அமைகிறது. இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் சுகாதாரமற்ற உடலுறவு, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்துதல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான சிகிச்சை முறைக்கு அதிக … Read more

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிப்பு

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தேங்காய்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி இரண்டு மாதங்களில் இரண்டு மில்லியன் தேங்காய்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் நாட்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என மரபு ரீதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விளைச்சல் குறைவு இது தொடர்பில் மரபு ரீதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா கூறுகையில், எதிர்வரும் நாட்கள், நாட்டில் தேங்காய் விளைச்சல் குறைவான காலப் பகுதி என்பதனால் … Read more

NEET 2022 – வெளியானது ஆன்சர் கீ…எப்படி சரிபார்ப்பது?

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET UG 2022 தேர்வு கடந்த ஜூலை மாதம் 17அம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகளானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 95 சதவீத மாணவ, மாணவிகள் எழுதிய நீட் தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 3,570 மையங்களில் நடைபெற்றது. இந்தச் சூழலில்,இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள்  நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  விடை குறிப்புகளுடன், OMR விடைத்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மாணவ, … Read more

தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 28 சுங்கச்சாவடிகளில், சுங்கக்கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக 90 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 100 ரூபாயாகியுள்ளது. பலமுறை பயணம் செய்ய 135 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 150 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வகை வாகனங்களுக்கு … Read more

கனமழை காரணமாக இன்று (01-09-2022) 4 மாவட்டங்ககளில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக இன்று (01-09-2022) திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மட்டும் வழக்கம்போல் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.96 குறைந்து, ரூ.2,045க்கு விற்பனை

சென்னை: சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.96 குறைந்து, ரூ.2,045க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றம் இன்றி ரூ.1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.