காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஈரோட்டில் 448 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து,448 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் நீர் திறக்கப்படுவதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர பகுதி குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், கடந்த 3 நாட்களுக்கு முன்பே கரையோர … Read more