லைகர் படத்தில் கேமியோ ரோலில் நடித்த மைக் டைசனுக்கு சம்பளம் இவ்ளோவா?: வேண்டாமென மறுத்த கரண் ஜோஹர்

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த ‘லைகர்’ கடந்த வாரம் 25ம் தேதி வெளியானது. பூரி ஜெகன்நாத் இயக்கிய ‘லைகர்’ குத்துச்சண்டை பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. இந்தப் படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருந்தார். ஸ்போர்ட்ஸ் ஜானரில் லைகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வாரம் 25ம் தேதி வெளியான ‘லைகர்’ திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. குத்துச்சண்டை போட்டியை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்த இந்தப் படத்தை பூரி … Read more

இன்று இந்திய பங்கு சந்தை இப்படித் தான் இருக்கும்.. எச்சரிக்கையா இருங்க!

சர்வதேச சந்தையில் நிலவிய பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், முந்தைய அமர்வில் பலத்த ஏற்றத்தினை கண்டன. குறிப்பாக சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேலாகவும், நிஃப்டியும் நல்ல ஏற்றத்தில் காணப்பட்டது. எப்படியிருப்பினும் கடந்த அமர்வானது விநாயகர் சதுர்த்தி என்பதால் இந்திய பங்கு சந்தைகள் விடுமுறையாகும். இதன் காரணமாக இன்று ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் ஜூன் காலாண்டு வளர்ச்சி விகிதம் குறித்தான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அதில் முதல் காலாண்டில் 13.5% என்ற அளவுக்கு இரு … Read more

நுகர்வோர் விலைச் சுட்டெண்னை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 ஓகத்தில் 64.3 சதவீதத்தைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 யூலையின் 60.8 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 64.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தில் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களால் பிரதானமாக தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 யூலையின் 90.9 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 93.7 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூலையின் … Read more

சுறுசுறுப்பு, ஞாபகசக்தி, வாயு பிடிப்பைப் போக்கும் பிரண்டை… டேஸ்டி துவையலுக்கு சிம்பிள் டிப்ஸ் பாருங்க!

Pirandai Thuvaiyal recipe in tamil: பிரண்டை மிகச்சிறந்த மூலிகைகளுள் ஒன்றாக உள்ளது. இவற்றுக்கு ‘வஜ்ஜிரவல்லி’ என்கிற பெயரும் உண்டு. கொடி வகையைச் சேர்ந்த இவை, இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. இவை பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியவையாக உள்ளன. இவற்றின் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. பிரண்டையில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட … Read more

#BREAKING || கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. ஜாமினில் வெளிவந்த ஆசிரியைகள்.!

சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேர் ஜாமினில் வெளியே வந்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். அதையடுத்து பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.  இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, … Read more

வேலூர்: பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன?!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வப்போது தண்ணீர் வரத்து குறைந்தாலும், அன்றிலிருந்து இன்றுவரை பாலாற்றில் தண்ணீர் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது பாலாற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுவதுமாக நிரம்பின. … Read more

விநாயகர் சிலைக்கு காவலுக்கு இருந்த நபர் அரிவாளால் வெட்டி கொலை..!

செங்கல்பட்டில் விநாயகர் சிலைக்கு காவலுக்கு இருந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாரதபுரத்தில் இருக்கும் விநாயகர்சிலைக்கு இரவு நேர காவலாக ராஜேஷ் கண்ணா, கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதிக்கு காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராஜேஷ் கண்ணாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் கண்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் … Read more

கோவை | ஏடிஎம்-மில் தானாக வந்த பணத்தை ஒப்படைத்த ஓட்டுநர்

மயிலாடுதுறையைச் சேர்ந்த ஓட்டுநர் அரவிந்த் (26), தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை புலியகுளத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-க்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது நான்கு 500 ரூபாய் நோட்டுகள் தானாக ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்துள்ளன. இதையடுத்து, தொடர்புடைய வங்கி தலைமையகத்தை தொடர்புகொண்டு அரவிந்த் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள், கோவை ரயில்நிலையம் அருகேஉள்ள எஸ்பிஐ அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நேற்று அங்கு … Read more

ஜொமோட்டோவின் 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' திட்டம் – இனி இந்தியாவின் மற்ற நகர உணவுகளையும் ஆர்டர் செய்யலாம்

சென்னை: ஜொமோட்டோ, புதிதாக ‘இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்’ (Intercity legends) என்கிற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையானது நகரங்களுக்கு இடையேயான உணவு விநியோக சேவையை வழங்கவுள்ளது. அதாவது, கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையில் இருந்தே ஆர்டர் செய்து பெற முடியும். இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள பிரபலமான உணவகங்களில் இருந்து ஸ்பெஷல் உணவுகளை மற்ற நகரங்களில் இருந்து ஆர்டர் செய்ய முடியும். ஆனால், இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சமாக … Read more

சக மாணவர்கள் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவன் கைது!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பள்ளியில் சக மாணவர்கள் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். படு காயம் அடைந்த இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களிடையே ஏன் மோதல் ஏற்பட்டது என்று விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தைத் தடை செய்ய அதிபர் ஜோ பைடன் உறுதி தெரிவித்த நிலையில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. Source link