வால்பாறை: தோட்டத்தில் புலி, கரடி நடமாட்டம்

வால்பாறையில் உள்ள தனியார் தோட்டத்தில் புலிகள் மற்றும் கரடி நடமாட்டம் காணப்படுகிறது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் காட்டுயானை – புலி – கரடி – சிறுத்தை – கரு சிறுத்தை – புள்ளி மான் – வரையாடு மற்றும் அபூர்வகையான பறவைகள் உள்ளன. வனப்பகுதி ஒட்டி தனியார் தேயிலை தோட்டம் பகுதிகள் நிறைந்தது என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனத்துறையினர் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர … Read more

தாயின் காதலனால் 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாயின் காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் 33 வயது பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இவரது கருத்து வேறுபாடு காரணமாக தனியே வசித்து வந்த அவருக்கு மகேஷ் குமார் பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், அந்த பெண்மணி வேலைக்கு சென்றுவிடவே மகேஷ் குமார் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சிறுமிக்கு ரத்தபோக்கு … Read more

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ஒரு கோடியே 85 லட்சம் ஹவலா பணம் பறிமுதல்!

சென்னை பூக்கடையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ஒரு கோடியே 85 லட்சம் ஹவலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மன்னடியைச் சேர்ந்த அம்ஜத் கான், நாரவாரி குப்பத்தைச் சேர்ந்த சேக்தாவுது ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில்  மண்ணடியில் உள்ள நகைக்கடைக்கு எடுத்து சென்று  நகைக்கடை அதிபரிடம் தெரிவித்து தொகையை உறுதிப்படுத்தி கொண்டது  தெரிய வந்தது. அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.  Source link

பள்ளி வன்முறையில் ரூ.3.5 கோடி சொத்து சேதம்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில் ரூ.3.45 கோடி மதிப்பில் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீ்ஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு தாக்கல் செய்து உள்ள இடைக்கால அறிக்கையில் … Read more

“நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள்… இது இந்தியா அல்ல” – அமெரிக்காவில் இந்தியரை இனரீதியாக தாக்கிய மற்றொரு இந்தியர்

கலிபோர்னியா: அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மற்றொரு இந்தியர் ஒருவரால் இனரீதியான தாக்குதலை எதிர்கொண்டுள்ளார். சில தினங்கள் முன் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் “அமெரிக்காவில் எங்கு சென்றாலும் நீங்கள்தான் (இந்தியர்கள்) இருக்கிறீர்கள்- இந்தியாவுக்கு திரும்ப ஓடுங்கள்” என மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் இனவெறியுடன் பேசி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல மற்றொரு இனவெறி சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறை இந்தியர் இனரீதியாக தாக்குதலை எதிர்கொண்டது … Read more

இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை..!

லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனா ராணுவ மேஜர் ஜெனரல்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 16 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இருநாட்டு ராணுவ மேஜர் ஜெனரல்கள் தங்கள் படைத்தளபதிகளுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அசல் எல்லைக் கோடு பகுதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் அமைதியை கடைபிடிக்க இருதரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை கடைபிடிக்கவும் இதுபோன்ற முன்னறிவிக்கப்படாத ராணுவ பேச்சுவார்த்தைகள் … Read more

மொத்த ரஷ்யர்களுக்கும் கிடுக்குப்பிடி… ஐரோப்பிய நாடுகள் மும்முரம்

ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் – பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி எதிர்ப்பு ரஷ்யாவை ஒட்டிய பல கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் ரஷ்யா உடனான விசா ஒப்பந்தங்களை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய குடிமக்கள் நுழைவது கடினமாகும் என கூறப்படுகிறது. ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என உக்ரைனும் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் கோரிக்கை … Read more

உலகளவில் 60.77 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.94 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 58.37 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை கும்பக்கரை மலைச்சாலை துண்டிப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒரே நாளில் கனமழை கொட்டி தீர்த்ததால், அடுக்கம்- கும்பக்கரை மலைச்சாலை மீண்டும் துண்டிக்கபட்டுள்ளது.திண்டுகல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 23 செமீ மழை பதிவானது. இதனால் ஏரி சாலை பகுதியில் உள்ள கடைகள் வெள்ள நீரில் மூழ்கின. கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. ஏரிச்சாலை பல இடங்களில் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. நீரை அகற்றும் பணியை கொடைக்கானல் நகராட்சி துறையினர் செய்து வருகின்றனர். … Read more