தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் செப்டம்பர்  15ஆம் திகதி முதல் ஆரம்பம்

இலங்கை மக்களுக்கு  புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில்  தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான “தாமரை கோபுரத்தின்” செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார்  113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக்  கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பல புதிய அனுபவங்களை வழங்க கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தாமரைக் கோபுரத் திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியுள்ள நிலையில், … Read more

‘கட்சித் தலைவராக இல்லை; முதலமைச்சராக வாழ்த்து தெரிவித்து இருக்கலாம்’- வானதி சீனிவாசன்

திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல், திமுகவினர் எங்கள் கட்சியில் இணைகிறார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம்” எனத் தெரிவித்தார். கோவை காந்திபுரம் 48ஆவது வார்டில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “அங்கன்வாடி மையங்களுக்கு … Read more

#BigBreaking | விநாயகர் சதுர்த்தி – கடும் நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற கிளை.!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், மனுதாரர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பாளர்கள் என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விநாயகர் ஊர்வலம் சம்மந்தமான வழக்கில், இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வைக்கவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற உத்தரவு பிறந்துள்ளது. மேலும், “அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிட்டு நடனம் அல்லது பாடல்கள் எதுவும் … Read more

“தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு… காலனிகளுக்கு கூட நிகரில்லை” – பிடிஆர் vs அண்ணாமலை ட்விட்டரில் மோதல்

சென்னை: தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் ட்விட்டரில் சொற்போரில் ஈடுபட்டுள்ளனர். மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த மோதல் வெடித்தது. மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன், காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட போது அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் … Read more

அரசியலுக்குள் உள்நுழையும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்! நம்பிக்கையை பாதுகாப்பதாக உறுதி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன்படி, பொலன்னறுவை – மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமனத்தை தஹாம் சிறிசேன இன்று  ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த பதவி தொடர்பான நியமனக் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையினால் பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை தஹாம் சிறிசேன வெளியிட்டுள்ளார்.  நம்பிக்கையைப் பாதுகாப்பேன்  தம்மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரினதும் நம்பிக்கையைப் பாதுகாத்து நிறைவேற்றுவேன் என அவர் கூறியுள்ளார்.  சுதந்திரக் கட்சியினால் … Read more

தொடங்கியுள்ள புது மாதம்! இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் ஜாக்பாட் அடிக்கப்போகிறாம்..இன்றைய ராசிப்பலன்

செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார்.   புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர்.     அந்தவகையில் தொடங்கியுள்ள மாதம் எந்த ராசிக்கு யோகத்தை தரப்போகுது என்று பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW          மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி … Read more

தேன்கனிக்கோட்டையில் பரிதாபம்: கனமழையால் சுவர் விழுந்து சிறுமி உட்பட 2 பேர் பலி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில், பெய்த கனமழைக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி உள்பட 2 பேர் இறந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாரப் தர்கா அருகே அரசமரத்து திண்ணையில் நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே, தனியாருக்கு சொந்தமான நிலத்திற்கு, 12 அடி உயரம் மற்றும் 30 அடி நீளத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், நாகர் சிலைகளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தனர். அருகில் … Read more

லடாக்கில் விமானப்படை உதவி 17,000 அடி உயர மலையில் சிக்கிய இஸ்ரேலியர் மீட்பு

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தளத்துக்கு லடாக்கின் மர்கா பள்ளத்தாக்கு அருகே உள்ள நிமலிங் முகாமில் இருந்து நேற்று அவசர அழைப்பு வந்தது. அதில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர், அடார் ககானா மலை உச்சியில் சிக்கி இருப்பதாகவும் வாந்தி, ஆக்சிஜன் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, விங் கமாண்டர் ஆஷிஷ் கபூர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு, ஹெலிகாப்டரில் அங்கு சென்றது. அங்கு 16 ஆயிரத்து … Read more

‛கிக்' கொடுக்கும் சந்தானம்

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் குலு குலு படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி இருந்தார். இந்த படத்தை அடுத்து சந்தானம் ‛கிக்' என்ற படத்தில் நடிக்கிறார். இதை கன்னடத்தில் ‛லவ் குரு, விசில், ஜூம்' போன்ற உள்ளிட்ட படங்களை இயக்கிய கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். தமிழில் அவர் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். நாயகியாக தன்யா ஹோப் நடிக்கிறார். காமெடி கலந்த பேன்டசி படமாக உருவாகும் என தெரிகிறது. … Read more