பாட்ஷா ஸ்டைலில் தளபதி 67… விஜய் கேங்ஸ்டராக நடிப்பது கன்ஃபார்ம்… லீக்கான சீக்ரெட் வீடியோ!

சென்னை: கோலிவுட்டின் டாப் ஸ்டாரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி பைடிபள்ளி இயக்கும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பரபரக்கும் வாரிசு ஷூட்டிங் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியானதுமே ‘வாரிசு’ ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என ஒரு மொழிகளில் வெளியாகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், … Read more

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – டெல்லி துணைநிலை கவர்னர் முடிவு

புதுடெல்லி, டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கதர் கிராம தொழில் ஆணைய தலைவராக இருந்தார். அப்போது அவர் ரூ.1,400 கோடி கருப்பு பணத்தை மாற்றியதாக ஆம் ஆத்மி புகார் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் எனவும் சட்டசபையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தினர். ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை சக்சேனா திட்டவட்டமாக மறுத்து உள்ளார். … Read more

நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிரான்ட்ஹோம் ஓய்வு

கிறைஸ்ட்சர்ச், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் காலின் டி கிரான்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “அடிக்கடி காயத்தில் சிக்குவதால் முன்பு போல் என்னால் கடினமாக பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. அணியிலும் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. மேலும் எனக்கு என்று ஒரு குடும்பம் உள்ளது. கிரிக்கெட்டுக்கு பிறகு எனது எதிர்காலம் என்ன என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது. இது குறித்து சில வாரங்களாக தீவிரமாக … Read more

இலங்கைக்கு கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல்: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

கொழும்பு, வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கை சர்வதேச நிதியத்திடம் அவசர கடனுதவியாக 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.39,733 கோடி) கோரியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்த நாட்டு அரசு அதிகரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24-ந்தேதி முடிவடைந்த நிலையில், சமீபத்தில் 2-ம் கட்டபேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை மேலும் … Read more

புத்தளம் பிரதேச செயலகத்தில் இன்று காணி கச்சேரி

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் புத்தளம் பிரதேச செயலகத்தில் காணிக் கச்சேரி இன்று (01) காலை 9:30மணிக்கு புத்தளம் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே அனுமதிகோரியவர்கள் பின்வரும் ஆவணங்களுடன் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். தமது தேசிய அடையாள அட்டை, வசிக்கும் இடத்தின் வாக்காளர் பட்டியல்,வசிக்கும் இடத்தின் மின்சாரப் பட்டியல் அல்லது நீர் விநியோகப்பட்டியல், போன்றவற்றின் மூலம் தாம் வசிக்கக்கூடிய இருப்பிடத்தை உறுதிசெய்யக்கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க கூடிய வகையில் சமூகமளிக்க வேண்டும்..