14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.! போக்சோவில் கைது.!

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர், இந்திரா நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் காங்கு. இவரது மகன் கார்த்திக் (27). இவர் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடந்த 23ஆம் தேதியன்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த … Read more

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார். அதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. மேலும் பொதுக்கூட்டம் செல்லாது … Read more

ஏழை, நடுத்தரவர்க்க மக்களுக்கு மத்திய அரசு கொடுத்த சர்ப்ரைஸ்; என்ன தெரியுமா?

உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியர்கள் அதிகம் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள் என்பது எப்போதுமே பெருமிதமான விஷயம். இதனால்தான் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியை நினைத்து அச்சத்தில் இருந்தாலும் இந்தியா அசால்ட்டாக இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸும் உலக நாடுகள் முழுக்க பொருளாதார நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று கூறியுள்ளார். இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்க முக்கிய காரணம் இந்திய மக்களின் சேமிப்பு. வரி சேமிப்பு முதலீடு வரி … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி 

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் … Read more

ஃபைலுடன் பறந்த ஆளுநர்; தமிழக அரசியலில் அனல்!

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோது திருமாவளவன் உள்ளே புகுந்து குட்டையை குழப்பியதாலேயே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினை தடை செய்ய வேண்டும் என்றும், திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றும், பாஜ மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் பாஜக மாநில … Read more

ஆம்புலன்ஸ் செல்ல கான்வாயை நிறுத்திய பிரதமர் மோடி – குவியும் பாராட்டு!

குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக, தனது கான்வாயை நிறுத்திய சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று வந்தார். அகமதாபாத்தில் நேற்று 36-வது தேசிய விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று, காந்தி நகர் – மும்பை சென்ட்ரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வந்தே … Read more

Watch: ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பிரதமர் கான்வாய் – குவியும் பாராட்டு

இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்திற்கு வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று, காந்திநகர் – மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். அதிக வேகமான ரயிலான இது, மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும்.  மேலும், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டப்பணிகளையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அகமதாபாத் நகரின் தூர்தர்ஷன் மையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து, கூட்டத்திற்கு பின் … Read more

9 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “30.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 1: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

கோடநாடு கொலை கொள்ளை வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்! டிஜிபி திடீர் உத்தரவு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகள் குறித்து  ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது, இந்த வழக்கு  திடீரென சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது கோடநாடு பங்களாவில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில்  ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் … Read more