சித்தூரில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் ரூ73 கோடி மதிப்பு நிலம் மோசடி: இளம்பெண் உள்பட 7 பேர் கைது

சித்தூர்: சித்தூரில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் நிலங்களை ரூ73.70 கோடிக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் நகர டிஎஸ்பி சுதாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் சித்தூர் மாநகரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், கட்டமஞ்சு பகுதியில் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை மீனாட்சி மற்றும் பார்வதி ஆகிய இருவரின் பெயருக்கு கருணாகர், யமுனா, ராஜசேகர், ஜெயச்சந்திரா, சுரேந்திரபாபு … Read more

இந்தியாவில் முதன்முறையாக பிடிக்கப்பட்ட ‘ப்ளாக் கொக்கைன்’ – சிக்கியது எப்படி?

இந்தியாவில் முதன்முறையாக போதைப்பொருள் தடுப்பு பிரிவால் ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்துவந்த வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து மும்பை விமான நிலையத்தில் 3.20 கிலோ ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.13 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ப்ளாக் கொக்கைன் என்பது வழக்கமான கொக்கைனுடன் சில வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பது. இப்படி ரசாயனம் ஏற்றப்பட்ட கொக்கைனை விமான நிலைய பரிசோதனையில் டிடெக்ரடாலோ அல்லது மோப்ப நாய்களாலோ கண்டறியமுடியாது. இதுபோன்ற போதைபொருள் இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டது இதுதான் முதன்முறை … Read more

சர்தார் டீசர் வெளியீடு – 6 தோற்றங்களில் கார்த்தி

இரும்புத்திரை படத்தை இயக்கிய பி .எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சர்தார். இப்படத்தில் அவருடன் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன். லைலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தில் கார்த்தி, கதிரவன் என்ற ஐபிஎஸ் வேடத்திலும், சர்தார் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். என்றாலும் இப்படத்தில் அவர் ஆறு விதமான கெட்டப்பில் நடித்திருப்பதாக டீசரில் தெரிகிறது. அந்த ஆறு பேரும் ஒருத்தன்தான் என்று வில்லன் கர்ஜிக்கும் டயலாக் ஓங்கி ஒலிக்கிறது. … Read more

ஒக்டேன் 92 பெற்றோல் விநியோகிக்கும் இரண்டு இயந்திரங்களுக்கு சீல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில். இரண்டு ஒக்டேன் 92 பெற்றோல் விநியோகிக்கும் இயந்திரங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (29) சீல் வைத்துள்ளது. நாடளாவிய ரீதியில் கிடைத்த புகார்களின் அடிப்படையில் அனைத்து எரிபொருள் நிலையங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பம் , எடை மற்றும் அளவீட்டுத்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் தரம் குறைந்த மட்டத்தில் … Read more

“சார்! எனக்கு ஒரே ஒரு ஆசை’’ | குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கலைந்திருந்த சட்டையையும் முடியையும் சரி செய்து கொண்டு கௌரவ் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் பொதுவாக சொன்னான்,”சார்!எனக்கு ஒரே ஒரு ஆசை” கௌரவின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் சுமார் பத்து நாட்கள் முன்னே செல்லவேண்டும். ஓய்வு பெற்று வீட்டிலிருந்த செல்வராஜுக்கு எப்போதும் ஏதாவது … Read more

உரிமம் இல்லாத 111 நாட்டு துப்பாக்கிகள் தாமாக ஒப்படைத்த மலைகிராம மக்கள்: வன அலுவலர் தகவல்

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களில் வசிக்கும் மலை கிராமமக்கள் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ள 111 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளும் ஓசூர் ஏஎஸ்பியிடம் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை கிராமமக்கள் தாமாக முன் வந்து ஒப்படைக்க வலியுறுத்தி மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஓசூர் வனக்கோட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை … Read more

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி… தேதி குறிச்ச உயர் நீதிமன்றம்- தமிழக போலீசாருக்கு செக்!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் நாடியது. அப்போது நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் பி.எஃப்.ஐ அமைப்பு மீதான ரெய்டு நடவடிக்கைகள், கைது, வழக்குப்பதிவு சம்பவங்கள் நடந்தன. உடனே ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரை குறிவைத்து பல்வேறு இடங்களில் பெட்ரோல் … Read more

பூட்டி கிடக்கும் பொது கழிவறை: பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

சின்னாளபட்டி: பாளையன்கோட்டையில் உள்ள பெண்கள் பொது கழிவறை பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதிமக்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாளையன்கோட்டை ஊராட்சியில் பாளையன்கோட்டை, கூலாம்பட்டி, பிரவான்பட்டி, காமன்பட்டி, லட்சுமிபுரம், பின்னிராயபுரம், கந்தசாமிபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில் பாளையன்கோட்டையில் உள்ள மயான சாலையில் பெண்கள் பொது கழிவறை உள்ளது. இந்த கழிவறை பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பெண்கள் திறந்த வெளியை … Read more

சென்னை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலுவை மக்கள் பார்வையிட அனுமதி

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலுவை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆளுநர் மாளிகை நவராத்திரி கொலுவை நாளை முதல் அக்.5 வரை மாலை 3 முதல் 5 மணிவரை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.