”எங்களுக்கு அடிப்படை வசதியே இல்லை”.. குடியிருப்பு போராட்டத்தில் இறங்கிய மலைவாழ் மக்கள்!
கெடுபிடி காட்டும் வனத்துறையினரை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியிலுள்ள பட்டுபூச்சி ஜெயந்தி நகர் பகுதி மக்கள் மலைப்பகுதியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான பட்டுபூச்சி ஜெயந்தி நகர் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் 15 வகையான பொருட்களை எடுத்து விற்பனை செய்ய அரசு இவர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. … Read more