ரூ.10 கோடி: வேலூரில் பெட்டி பெட்டியாக லாரியில் பணத்தை எடுத்துச் சென்ற கும்பல்…

சென்னை: சென்னையில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி பணத்தை பள்ளிகொண்டாவில் போலீஸார் பறிமுதல்‌ செய்தனர்.  வேலூர் அருகே சுங்கச்சாவடி ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றில் லாரியில் இருந்து காருக்கு பெட்டி பெட்டியாக பணத்தை மாற்றிய கும்பலை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர்  அடுத்த பள்ளிகொண்டா  சுங்கன்சாவடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது நின்று கொண்டிருந்த லாரியிலிருந்து காருக்கு … Read more

கோவை பாரதியார் பல்கலை.யில் புகுந்த 8 யானைகள் காட்டுக்குள் விரட்டியடிப்பு

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த 8 யானைகள் காட்டுக்குள் விரட்டி அடிக்கப்பட்டது. கோவை மருதமலை, பாரதியார் பல்கலைக்கழகம், தடாகம் உள்ளிட்ட பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. யானை நடமாட்டத்தை கண்காணிக்க இரவு முழுவதும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின் பகுதியில் உள்ள வனத்தில் இருந்து நேற்று மாலை வெளியேறிய குட்டியுடன் கூடிய 8 காட்டு யானைகள் கூட்டம், பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தன. வழித்தவறி … Read more

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று முதல் 2000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று முதல் 2000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. காந்தி, ஜெயந்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படும் நிலை நிலவுவதாக பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் கோஷ்டிக்குள் மோதல்; பல்கலை மாணவர் மீது துப்பாக்கிச்சூடு: டெல்லி மருத்துவமனை வளாகத்தில் பதற்றம்

புதுடெல்லி: ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ெடல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகத்தில் இரு மாணவர்கள் குழுகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த சர்தஹான் கிராமத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் நோமன் சவுத்ரி (26) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹோலி … Read more

ஈரோடு: விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி தொழிலாளி உயிரிழப்பு.!

ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சம்பத்நகர் அடுத்துள்ள கொத்துக்காரர் வீதியில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்கள் இயங்கி வரும் விசைத்தறி கூடத்தில் 24 தறிகள் உள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம்போல நீலமேகம், மாற்றுத்திறனாளிகளான செந்தில் மற்றும் விஜி ஆகிய மூவர் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது மின் கசிவு ஏற்பட்ட‌ காரணத்தால், … Read more

பிரதமர் மோடி துவக்கி வைத்த "வந்தே பாரத்" ரயிலில் இவ்வளவு சிறப்பம்சங்களா!? இதோ பட்டியல்!

காந்திநகர் – மும்பை இடையே “வந்தே பாரத்” ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்திநகர் – மும்பை வழித்தடத்தில் நவீன வசதிகளுடன் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தொடங்கி வைத்தார். காந்திநகர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து, இந்த சேவையை தொடங்கிவைத்த மோடி, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார்.  இணையதள சேவைகளுக்கான வை-பை (WI-FI) உள்ளிட்ட பல … Read more

“வெந்து தணிந்தது காடு Vs நானே வருவேன்”.. இரண்டு படங்களுக்கு இடையே இவ்வளவு ஒற்றுமைகளா?!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம்போன்று ஒருவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் நாம் ‘நானே வருவேன்’ படத்தை பற்றி பேசப்போவதில்லை. ‘நானே வருவேன்’ படத்திற்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். என்ன.. ‘நானே வருவேன்’.. ‘வெந்து தணிந்தது காடு’ படங்களுக்கு இடையே ஒற்றுமையா?.. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!. நிச்சயம் இருக்கத்தானே … Read more

கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 5 மாதங்களில் நான்காவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. … Read more

நானே வருவேன் முதல்நாள் வசூல் கணக்கு

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் “நானே வருவேன்”. இந்துஜா, எல்லி அவ்ரம், பிரபு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சைக்கலாஜிக்கல் கலந்த திரில்லர் படமாக புதிய கதையில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி இந்த படத்திற்கு முதல்நாளிலேயே நல்ல வசூல் கிடைத்துள்ளது. இந்த படம் முதல்நாளில் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. … Read more

கல்வி , திறன் விருத்தி பயிற்சிகளில் ஒத்துழைப்பினை வலுவாக்க இந்தியா – இலங்கை திடசங்கற்பம்

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் (ITEC) அடிப்படையில் இந்தியா மற்றும் இலங்கை இடையில் காணப்படும் 58 ஆண்டுகால ஆளுமை விருத்தி பங்குடைமையைக் கொண்டாடும் ITEC தினநிகழ்வுகள் 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. 2. கல்வி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள் பிரதம விருந்தினராகவும், கல்வி அமைச்சின் செயலாளர் திரு.நிஹால் ரணசிங்ஹ, அவர்கள் கௌரவ விருந்தினராகவும் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்திருந்தனர்.  ITEC திட்டத்தின்கீழ் இந்தியாவில் பல்வேறு … Read more