உணவக சோதனைகளுக்கு ஊடகங்களை அழைத்துச் செல்ல தடை!!
உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை வீடியோ எடுத்து வெளியிட தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது விதிகளை பின்பற்றாமல் ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தங்கள் உணவகங்களின் பெயர் கெடுகிறது என்றும், எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவக சோதனையின் போது … Read more