அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவிய PR நிறுவனத்தை கைவிட்ட ஹரி-மேகன் தம்பதி!


இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தங்களுக்கு உதவிய PR நிறுவனத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் மேகன் மார்க்கல் நடிகையாக இருந்த நாட்களில் இருந்து அவருக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

பிரித்தானிய அரச குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவிய PR நிறுவனத்தை இளவரசர் ஹரியும் மேகனும் கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020-ல் மூத்த அரச குடும்ப உறுப்பினர்களாக இருந்து விலகிய பிறகு ஹரி மற்றும் மேகன் அமெரிக்காவில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க, நியூயார்க்கை தலையிடமாக கொண்ட மக்கள் தொடர்பு ஆலோசனை (Public Relation) நிறுவனமான Sunshine Sachs பெரிதும் உதவியது.

அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவிய PR நிறுவனத்தை கைவிட்ட ஹரி-மேகன் தம்பதி! | Prince Harry Meghan Ditch Pr Firm Helped Them UsAFP via Getty Images

இந்த நிறுவனம் மேகன் மார்க்கல் நடிகையாக இருந்த நாட்களில் இருந்து அவருக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

சன்ஷைன் சாக்ஸ் நிறுவனத்தின் கூட்டாளியான Keleigh Thomas Morgan, அமெரிக்காவில் குடியேறிய தம்பதியினருடன் தனது முக்கிய கலிபோர்னியா தொடர்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது மோர்கனின் நண்பரான அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் Tyler Perry, ஹரி மற்றும் மேகன் முதன்முதலில் லாஸ் எஞ்சல்ஸ்க்கு குடிபெயர்ந்தபோது அவரது வீட்டில் தங்க அனுமதித்தார்.

அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவிய PR நிறுவனத்தை கைவிட்ட ஹரி-மேகன் தம்பதி! | Prince Harry Meghan Ditch Pr Firm Helped Them UsReuters,Getty Images

அன்றைய நிலைமையில், மேகனுக்கு இது மிகவும் பெரிய விடயமாக இருந்தது, இதன்மூலம் தனக்கும் ஹரிக்கும் விளம்பரம் (PR) செய்ய வெளி நிறுவனத்திற்கு அதிக பணம் செலுத்த வேண்டியதில்லை என்று அவர் கருதியதாகவும் கூறப்படுகிறது.

மேகனுடன் நட்பு கொண்ட மோர்கன், 2019-ல் தம்பதியரின் வெற்றிகரமான ஆப்பிரிக்க அரச சுற்றுப்பயணத்தைத் திட்டமிட உதவினார்.

அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவிய PR நிறுவனத்தை கைவிட்ட ஹரி-மேகன் தம்பதி! | Prince Harry Meghan Ditch Pr Firm Helped Them UsPA

ஆனால், இப்போது ஹரியும் மேகனும் தங்களுக்கு உதவிய அந்த Sunshine Sachs நிறுவனத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

இப்போது, ஹரி மற்றும் மேகனின் தொண்டு நிறுவனமான ஆர்க்கிவெல்லின் தகவல் தொடர்புத் தலைவர் Christine Schirmer, அவர்களது விளம்பரங்களை (பொது தொடர்பு வேலைகளை) கையாளுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணியின் மரணத்தைத் தொடர்ந்து ஹரியும் மேகனும் தங்கள் நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியையும் நினைவுக் குறிப்பையும் திருத்த ஆசைப்படுவதாக ஆதாரங்கள் தெரிவித்ததை அடுத்து இது வந்துள்ளது.

பல மில்லியன் டொலர் நெட்ஃபிக்ஸ் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த ஜோடி ஒரு ஆவணப்படத்தில் வேலை செய்து வருகிறது.

நவம்பர் அல்லது டிசம்பரில் ஒளிபரப்பப்படும் என்று வதந்தி பரப்பப்பட்ட இந்தத் தொடர், அவர்கள் திருத்தங்களைச் செய்ய விரும்புவதால், அடுத்த ஆண்டுக்குத் தள்ளப்படலாம் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையில், நவம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்ட ஹரியின் நினைவுக் குறிப்பு, ஏற்கனவே அடுத்த ஆண்டு வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.