புதுடெல்லி: ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான , நாகலாந்து ,அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
மேலும், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நம்சாய் மற்றும் மகாதேவ்பூர் காவல் நிலையங்களின் எல்லைக்குள் வரும் பகுதிகளிலும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படை சட்டம் சிறப்பம்சங்கள்:
இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும். சந்தேகப்படும் நபர்களை கைது செய்து, விசாரணை நடத்தும் அதிகாரம் உண்டு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement