தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி ,முன்பள்ளி பிள்ளைகளுக்காக காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நவம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் ,கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போசாக்கு பொதிக்கான தொகையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறினார்.
ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி முன்பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு வழங்கும் மாவட்ட வேலைத்திட்டம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
M.Sakunthaladevi