ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு: மக்கள் பார்வையிட அனுமதி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலுவை கடந்த 26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கொலுவை பொதுமக்கள் பார்வையிட முதன்முறையாக அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, இன்று முதல் (அக்.1) முதல் அக்.5-ம் தேதி வரை நாள்தோறும் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை ஆளுநர்மாளிகையில் மக்கள் கொலுவை காணலாம்.

கொலுவை காண விருப்பமுள்ளவர்கள், பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாள அட்டை, கொலு காண வரும் நாள் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அழைக்கப்படுபவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.