திருமலை: இன்று கருட சேவை நடைபெற உள்ளதையொட்டி திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பக்தர்களின் வருகை அதிகரிப்பால் திருமலையில் உள்ள அனைத்து இடங்களும் வாகனங்களால் நிரம்பியுள்ளது. வாகன நெரிசலை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
