’என்னை என் கட்சி கண்டுக்கல’… அதிமுகவை சாடிய போண்டா மணி; பதறி நலம் விசாரித்த ஜெயக்குமார்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை துணை நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இவர் ஈழத்தை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். விவேக், வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, மருதமலை படத்தில் வடிவேலுவுடன் இவர் வரும் காட்சி இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகிறது. இந்தச் சூழலில்  நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரை நேரில் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் போண்டா மணியின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என உறூதியளித்தார். அதுமட்டுமின்றி போண்டா மணி வெளியிட்ட வீடியோவில், “கேட்டவுடனே நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் பணத்தை வங்கி எண்ணிற்கு போட்டுவிட்டார் அவர் கொடுத்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம். எனக்கு உதவி செய்ய உள்ளதாக வடிவேலு பேசியதைக் கேட்டு பாதி குணமடைந்துவிட்டேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே போண்டா மணி அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் அவரை அக்கட்சியினர் இந்த விஷயத்தில் எப்படி நடந்துகொள்ளப்போகிறார்கள் என கேள்வி எழுந்தது. ஆனால் அதிமுகவிலிருந்து ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழலில் போண்டா மணி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியிருக்கிறார்.அதிமுகவிலிருந்து யாரும் போண்டா மணியை சீண்டவில்லை என்று எழுந்த விமர்சனத்தை ஒழிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், பெஞ்சமினு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவர்கள் வழங்கினர்.

 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போண்டா மணி, “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதை அறிந்த சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் வந்து நலம் விசாரித்தார். முதலமைச்சர் சார்பில் அவரது உதவியாளர் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார். நான் உழைத்த கட்சி சார்பில் யாரும் வந்து நலம் விசாரிக்காதது மன வருத்தம் அளித்தது.

Bonda Mani

இந்த சூழலில் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என் இல்லம் வந்து உடல்நலம் விசாரித்து நிதி உதவி அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை இருப்பதால் என் துறை சார்ந்தவர்கள் எனக்கு உதவி செய்வாளர்கள். நான் மீண்டு வந்து மக்களை சிரிக்க வைக்க நிச்சயம் நடிக்க வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.