கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணம் செய்த போது ஓசி பயணம் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகளை அதிமுக உறுப்பினராக பிரத்திராஜ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், திமுகவினர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் அதிமுகவை சேர்ந்த பிரத்திவ்ராஜ் (40), மதிவாணன் (33), விஜயானந்த், மற்றும் மூதாட்டி துளசியம்மாள் ( 68) ஆகிய 4 பேர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்று பேசும் போது பெண்கள் ஓசி பேருந்தில் பயணிப்பதாக குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் நிலையில் கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணம் செய்த போது ஓசி பயணம் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகளை அதிமுக உறுப்பினராக பிரத்திராஜ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், திமுகவினர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் பேசிய வீடியோ வைரல் ஆனா நிலையில் ஓசி பேருந்து என பேசிய விவகாரம் தொடர்பான கேள்விக்கு,”விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுப்படுத்த வேண்டிய தேவையில்லை. நான் கலோக்கியலாக (பேச்சுநடையில்) பேசியதை தவறாக மக்கள் புரிந்து கொண்டனர்” என விளக்கமளித்தார்.