கமல்ஹாசனால் பல கோடிகளை இழந்த வாரிசு தயாரிப்பாளர்!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இந்தியா முழுவதும் அன்றிலிருந்து இன்றுவரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர்.  சில வருடங்களாக இவரது படங்கள் எதுவும் திரைக்கு வராமல் இருந்த நிலையில், இந்த வருடம் ‘விக்ரம்’ படம் திரையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.  இந்த ஆண்டில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிதளவில் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் எதிர்பார்த்ததை விட அதிக திருப்தியளித்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர், இன்றுவரை விக்ரம் படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  நீண்ட காலமாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கிடப்பில் போடப்பட்டிருந்த ‘இந்தியன்-2‘ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  அதற்கு காரணம் ‘விக்ரம்’ படத்தின் வெற்றி தான் என்று கூறப்படுகிறது, இப்படத்தின் வெற்றிக்கு பிறகு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தியன்-2 படத்தை தயாரிக்க களமிறங்கியுள்ளது, இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து இப்படத்தை உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து தயாரிக்க முன் வந்துள்ளார்.  

ஆனால் முதலில் ‘இந்தியன்-2’ படத்தை தயாரித்தது தயாரிப்பாளர் தில் ராஜு தான், ‘இந்தியன்-2’ படத்திற்கான பட்ஜெட் அதிகமாக இருப்பதாகவும், இந்த நடிகரின் படத்திற்கு இவ்வளவு தொகை செலவு செய்வது எடுபடாது என்கிற நினைப்பால் தில் ராஜு இந்த படத்தை கைவிட்டார், கிட்டத்தட்ட லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இந்த காரணத்தினால் இந்தியன்-2 படத்தை முதலில் கைவிட்டது என்றும் கூறப்படுகிறது.  ஆனால் கமல் தற்போது விக்ரம் பட வெற்றியின் மூலம் தனது நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தி காட்டியுள்ளார், இப்படம் அவரது கேரியரில் மிக சிறந்ததொரு படமாகவும் அமைந்திருக்கிறது.  கிட்டத்தட்ட தமிழ் திரையுலகை அந்தஸ்தே இந்த படம் மூலம் உயர்ந்து இருக்கிறது என்று பலரும் கருதுகின்றனர்.

தற்போது மறுபடியும் வேகம் கொண்டு உருவாகி வரும் ‘இந்தியன்-2’ படம் அதிகளவில் வசூலை என்றும் தயாரிப்பாளர் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.  இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜுவின் கணக்கு தப்பாகிவிட்டதாகவும்,  இப்படத்தை அவர் கைவிட்டதால் அவருக்கு கிடைக்கப்போகும் பல கோடிகள் தற்போது கிடைக்காமல் போய்விட்டது என்று திரை வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.