அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அமைதிக்கான யாத்திரை எனும் முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறது ஒன் நேஷன் அமைப்பு. ஸ்ரீ சத்ய சாய் அன்னப்பூர்னா நிர்வாகம் ஆரம்பித்த அமைப்பான இந்த ஒன் நேஷன் அமைப்பு இந்தியாவிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முறையான கல்வி, மருத்துவம், மற்றும் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் ஆரம்பித்த முன்னெடுப்புதான் ஒரு ரூபாய் ஆப் (One Rupee App). தன்னார்வலர்கள் இந்த ஆப்பில் பதிவு செய்து இவர்களின் இந்த முன்னெடுப்பிற்காக வெறும் ஒரு ரூபாய் வழங்கினால் அது ஏழை மாணவர்கள் பலரின் பசியைப் போக்கச் சேமிக்கப்பட்டுச் செலவிடப்படுகிறது.
இவர்கள் தற்போது காந்தி ஜெயந்திக்காக எடுத்துள்ள முன்னெடுப்பு இந்த ஒரு ரூபாய் புரட்சி. ஒரு ரூபாய் ஆப்பை இன்ஸ்டால் செய்து, அதில் நாம் பதிவு செய்தல் வேண்டும். அக்டோபர் 2-ம் தேதி அன்று நாம் நடக்கும் ஒவ்வொரு பத்து அடிகளுக்கும் குழந்தைகளின் கல்வி, மருத்துவத்திற்காக ஒரு ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது ஒன் இந்தியா அமைப்பு. இந்த ஆப்பை ஆப்பிள் iOS, ஆண்ட்ராய்டு இரண்டிலும் தரவிறக்கம் செய்யலாம். கூகுள் ப்ளேஸ்டோரில் ‘ONE RUPEE’ என்று பெயரிடப்பட்டிருக்கும். இது குறித்து மேலும் பல தகவல்கள் www.onenation.org.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ஒன் நேஷன் நடத்தும் இந்த முன்னெடுப்பிற்குக் கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட், முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.