சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை யமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போன்ற நகர்ப்புறங்களில் செயல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய பெட்ரோலியம், எரிவாயு, தொழிலாளர் நலன் துறைகளின் இணையமைச்சர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகஅரசு தற்போது கெயில் நிறுவனம் மூலம் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், முந்தைய அதிமுக அரசு கெயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்க மறுத்து வந்தது. இதனால், இந்த திட்டம் செயல்படுத்துவதில் தாமம் ஏற்பட்டது. தற்போது திமுக அரசு, கெயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளதால், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
இநத் திட்டத்தின்படி முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்தடுத்த கட்டங்களில், மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு எரிவாயு வழங்கப்படும் என்றவர், இவ்வாறு குழாய் வாயிலாக விநியோகிக்கப்படும் எரிவாயுவின் விலை குறைவாகவே இருக்கும் என்றார்.
சென்னை எண்ணூர் – தூத்துக்குடி துறைமுகம் இடையே ரூ.6,000 கோடி மதிப்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிiய கெயில் நிறுவனம் செய்லபடுத்தி வருவதாக கூறிய அமைச்சர், புதிதாக பெட்ரோல் பங்குகள் தொடங்க உரிமம் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்றும், அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எரிவாயு நிரப்பிக்கொள்ளும் வசதியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பெட்ரோல் மாசைக் குறைக்க 20% எத்தனால் கலந்து இனி பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.