தேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோயில் அருகே மாபெரும் பனிச்சரிவு இன்று காலை ஏற்பட்டது. ஆனால், இந்த பனிச்சரிவால் அங்குள்ள கேதாரீஸ்வரர் கோவிலுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் உள்ள கோயில்கள் கடும் பனி பொழிவு இருக்கும் என்பதால் குளிர்காலத்தில் மூடப்பட்டு கோடைகாலத்தில் திறக்கப்படுவது வழக்கம். இந்த 4 கோயில்களுக்கும் பக்தர்கள் செல்லும் யாத்திரை சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
நடப்பாண்டும், ஆயிரக்கணக்கான பக்தர்களின் முழக்கத்துக்கு இடையே கடந்த மே மாதம் கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டது. லட்சக்கணக் கானோர் தரிசனம் செய்து வந்தனர். தற்போது அங்கு பனிப்பொழிவு இருப்பதால் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அக்டோபர் மாதத்திற்கு பிறகு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில், கேதர்நாத் கோவில் அருகே இன்று காலை 6மணி அளவில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. பணி உருகி வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதில் விசேஷம் என்னவென்றால், இந்த பனிச்சரிவு, அருகே இருந்த கேதர்நாத் ஆலயத்தை நெருங்காமல் அகன்று சென்றது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.