சேமலாப பயன்களை பெறுவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நேற்று (30) திஅகதியுடன் நிறைவடைய இருந்தது.
சமுர்த்தி நிவாரண நிதி உதவி பெறுவோர் , முதியோர், சிறுநீரக நோய்க்கான உதவி பெறுவோர், ஊனமுற்றோர் மற்றும் பொதுமக்கள் உதவி வழங்கும் அனைத்து பயனாளிகள் சேமலாப பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் பயன்களை எதிர்பார்த்துள்ள அனைவரும் இந்த புதிய பதிவில் உள்வாங்கப்படுவது கட்டாயமாகும்.
இதற்காக விண்ணப்பிக்கும் நபர் தமக்கு உரிய பிரதேச செயலகத்திற்கு அந்த விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என்று நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.
011 2151 482 என்ற தொலைபேசி ஊடாக அல்லது 1919 என்ற அரச தகவல் கேந்திரத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.