டெல்லி: டெல்லியில் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த 5ஜி சேவை தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிவேக இன்டர்நெட் வசதியை கொடுக்கும் என கூறப்படுகிறது.
