டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி கூட்டம் நடத்துவது உள்பட பல்வேறு நிதி சம்பந்தமாக பேசியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நேற்று டெல்லி சென்றார். அங்கு நேற்று நிதித்துறைச் செயலாளர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகைஉள்பட பல்வேறு நிதித்துறை சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்.ச அதனைத் தொடர்ந்து இன்று காலை 10.40 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, மத்திய நிதி =அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏற்கனவே அறிவித்ததுபோல, எப்போது, அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் கூட்டலாம் என்பது குறித்தும், ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்பட தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கான நிலுவைத்தொகை தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிடிஆர், சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகளுக்கான கடன் பத்திரங்களைப் பெறுவதற்கு, மத்திய அமைச்சரவை விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டுமென மீண்டும் கோரிக்கை வைத்ததாகவும், இந்த மாத இறுதிக்குள் அதற்கு ஒப்புதல் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.