திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர் கார் மூலமாக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
