ஈரோடு: தீபாவளியையொட்டி ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் ஆவின் கால்நடை தீவன ஆலையை ஆய்வு செய்த பின் அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் ஆவின் தீபாவளி விற்பனை ரூ.53 கோடியாக இருந்தது என அவர் தெரிவித்தார்.
