தொண்டர்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர்| Dinamalar

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சிரோஹியின் அபுரோடு பகுதியில் நேற்று பா.ஜ., பேரணி நடந்தது. இதன் முடிவில் பிரதமர் மோடி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ராஜஸ்தான் வந்த மோடியை, முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே, மாநில பாஜ., தலைவர்கள் , நிர்வாகிகள் ஆகியோர் வரவேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேச மோடி மேடைஏறிய போது இரவு 10 மணியாகிவிட்டது. அங்கு, இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதனை பின்பற்றுவதாக கூறிய மோடி மைக் இல்லாமல் கூட்டத்தினரிடையே பேசினார்.

மைக் இல்லாமல் மோடி பேசியதாவது: இங்கு வர தாமதமாகிவிட்டது. இரவு 10 மணியாகிவிட்டது. விதிகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எனது மனம் கூறுகிறது. நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். மீண்டும் இந்த பகுதிக்கு வந்து நீங்கள் காட்டும் அன்பையும், ஆதரவையும் பெறுவேன் என உறுதி அளிக்கிறேன் என்றார். தொடர்ந்து கூட்டத்தினரை பார்த்து மேடையிலேயே மன்னிப்பு கோரினார். இது குறித்து வீடியோவை பா.ஜ.,வினர் பகிர்ந்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.